பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 மூதுரை 5

நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால்

                    அந்நன்றி என்று தருங்கொல் எனவேண்டா- 
                      நின்று தளரா வளர்தெங்கு தாளுண்ட 
                      நீரைத் தலையாலே தான் தருதலால்.
                          (1)

நல்லார் ஒருவர்க்குச் செய்த

                    வுபகாரம் கல்மேல் எழுத்துப்போல் 
           காணுமே-அல்லாத ஈரமில்லா நெஞ்சத்தார்க் கீந்த 
                    வுபகாரம் நீர்மேல் எழுத்திற்கு நேர். 
                          (2)

இன்னா இளமை வறுமைவிந்

              தெய்தியக்கால் இன்னர் அளவில் இனியவும்- 
                    இன்னாத நாளல்லா நாள்பூத்த நன்மலரும் 
                    போலுமே ஆளில்லா மங்கைக் கழகு.
                          (3)

அட்டாலும் பால்சுவையிற் குன்றா

                     தளவல்ல நட்டாலும் நண்பல்லார் 
                   நண்பல்லர் கெட்டாலும் மேன்மக்கள் 
           மேன்மக்களே சங்கு சுட்டாலும் வெண்மை தரும்.
                     .... (4)

அடுத்து முயன்றாலும் ஆகுநாள்

                     அன்றி எடுத்த கருமங்கள் ஆகா- 
                    தொடுத்த உருவத்தால் நீண்ட வுயர்மரங்கள் 
                     எல்லாம் பருவத்தால் அன்றிப் பழா.
                          (5)