பக்கம்:நல்வாழ்வுக்கு வழி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூதுரை 7

உற்ற விடத்தில் உயிர்வழங்குந்

                தன்மையோர் பற்றலரைக் கண்டால் 
           பணிவரோ-கற்றுான் பிளந்திறுவ தல்லால் பெரும்பாரந் 
                     தாங்கிற் தளர்ந்து வளையுமோ தான். (6)


நீரளவே யாகுமாம் நீராம்பல்

                    தான்கற்ற நூலளவே யாகுமாம் 
          நுண்ணறிவு-மேலைத் தவத்தளவே யாகுமாம் 
          தான்பெற்ற செல்வம் குலத்தளவே யாகுமாங் குணம்(7)


நல்லாரைக் காண்பதுவும் நன்றே

                    நலமிக்க நல்லாற்சொற் கேட்பதுவும் 
              நன்றே-நல்லார் குணங்கள் உரைப்பதுவும் 
              நன்றோ அவரே டிணங்கி யிருப்பதுவும் நன்று.(8)


தியாரைக் காண்பதுவும் தீதே

                   திருவிற்ற தியார்சொற் கேட்பதுவும் திதே- 
                      தியார் குணங்கள் உரைப்பதுவும் தீதே 
                     அவரோ டிணங்கி யிருப்பதுவும் தீது.(9)


நெல்லுக் கிறைத்தநீர் வாய்க்கால்

                   வழியோடிப் புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்- 
                தொல்லுலகில்

நல்லார் ஒருவர் உளரேல்

                 அவர்பொருட் டெல்லார்க்கும் செய்யும் மழை. 
                         (10)