பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

13


ரொம்பவும் வேகமாக நடப்பவராகையால் அவருடன் பிரயாணம் செய்யும் பொருட்டே இம் மாதிரி வேகமாக நடந்து பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கிறேன்!” என்று கூறினேன்.

என்னைத் தொடர்ந்து வந்த நண்பர்கள் அத்துடன் திருப்தி அடைந்தவர்களாகி வேறு திசையில் தங்கள் நடையைக் கட்டினார்கள்.

பிரயாணத் திட்டம்

காந்தி மகாத்மாவோடு நவகாளி ஜில்லாவில் பிரயாணம் செய்வதற்கான பூர்வாங்க ஏற்பாடுகளை எல்லாம் முடித்துக் கொண்டு மறுநாள் ரயில் ஏறிக் கல்கத்தா நகரத்தை அடைந்தேன்.

கல்கத்தாவில் தென்னிந்தியப் பிரமுகரான திரு. சாரியார் வீட்டில் தங்கி, அங்கிருந்து நவகாளி மார்க்கத்தைக் கண்டுபிடித்து, காந்திஜி தங்கியுள்ள கிராமத்துக்குச் செல்லும் வழி முதலிய விவரங்களை அறிவதற்குள் இரண்டு தினங்கள் கழித்துவிட்டன. இதற்குள் மகாத்மாவின் முதல் யாத்திரைத் திட்டம் தொடங்கப் போகிறதென்றும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகி இருந்தது. மேற்படி இரண்டாம் யாத்திரையின் திட்டப்படி காந்தி மகான் முதலாவதாக ஸ்ரீநகர் என்னும் கிராமத்துக்கு விஜயம் செய்வார் என்றும் கண்டிருந்தது.

ஸ்ரீநகர் கிராமத்தை அடைவது எப்படி என்று திரு. சாரியார் அவர்களை விசாரித்தேன். நண்பர் சாரியார் தம்முடைய கைகளை அகல விரித்துவிட்டு, ”எனக்குத் தெரியாதே!” என்றார். அப்போது என் முகத்தில்