பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

21


சொன்னார்கள். எனவே, மேற்படி வீட்டை வலமாக ஒரு முறை சுற்றி வந்து, வாசற்படி வழியாக சந்நிதானத்தின் மூல விக்கிரகத்தை எட்டிப் பார்த்தேன். அஹிம்சா மூர்த்தி எம்மான் காந்தி அயர்ந்து நித்திரையில் ஆழ்ந்திருந்தார். சாந்த ஸ்வரூபியின் முகத்திலே அறவொளியின் தேஜஸ் பிரதிபலித்தது. அவருக்குப் பக்கத்திலே கைக்கோலும், கைராட்டையும் காணப்பட்டன.

ஆகா! காந்தி மகாத்மாவைக் கண்ட மாத்திரத்திலேயே என்னுடைய பிரயாண அலுப்பெல்லாம் சூரியனைக் கண்ட பனி போல் அடியோடு மறைந்தன.

மகாத்மாஜியின் தரிசனம் கிட்டியதே என் பாக்கியம் என்று பூரிப்படைந்தவனாய் அந்த இடத்துக்கு அருகாமையிலேயே அமைந்திருந்த நிருபர்கள் முகாமுக்குச் சென்றேன்.

★ ★ ★

த்திரிகை நிருபர்களுக்காக மகாத்மாஜியின் வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு குடிசையை ஒதுக்கி விட்டிருந்தார்கள். இன்னொரு பக்கத்தில் வங்கப் போலீஸார் தங்கியிருந்தார்கள். மற்றொரு குடிசையில், வங்காள யூனிவர்ஸிடி புரொபலர் திரு. நிர்மல் குமார் போஸ் சுறுசுறுப்பாகத் தமது அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். நிர்மல்குமார் போஸ்தான் அப்போது மகாத்மாஜியின் ஆபீஸ் அலுவல்களைக் கவனித்துக் கொண்டிருந்தார். அத்துடன் மகாத்மாஜியின் பிரார்த்தனைப் பிரசங்கங்களை வங்காளியில் மொழி பெயர்த்துக் கூறுவதும் அவருடைய அன்றாட முக்கிய