பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நவகாளி யாத்திரை

39


ஊன்றிக்கொண்டும் கைக்கோல் இல்லாமலும் நடப்பதற்குப் பழக்கம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில் பண்டித ஜவஹரும் இன்னும் சிலரும் மகாத்மாவிடம் அரசியல் சம்பந்தமாக சில அந்தரங்க ஆலோசனைகளைக் கேட்பதற்காக ஸ்ரீராம்பூருக்கு வந்திருந்தார்கள். காந்திஜி அப்போது மூங்கில் பாலத்தில் நடந்து செல்லும் வித்தையை அவர்களுக்கு நேரில் செய்து காட்டினார். நேருஜி அதைப் பார்த்துவிட்டு, ”பூ! இவ்வளவுதானா?” என்பதைப் போல் சிரித்தார்.

காந்திஜி, ஜவஹரைப் பார்த்து, ”தாங்கள் நினைக்கிறபடி இந்தப் பாலத்தில் நடப்பது அத்தனை சுலபமல்ல; நடந்து பார்த்தால்தான் இதிலுள்ள கஷ்டம் தெரியும்” என்றார்.