பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

நவகாளி யாத்திரை


கொள்ளும் பாக்கியம் பெற்ற நான் ஊருக்குத் திரும்பும்போது காந்தி மகானிடம் விடை பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரைத் தரிசிக்கச் சென்றேன்.

புன்னகை பூத்த முகத்துடனே என்னை ஆசீர்வதித்த தெய்வ புருஷர் தம் கைகளை நீட்டி ஹரிஜன நிதிக்குப் பணம் கேட்டபோது என் கண்களிலிருந்து பெருகிய கண்ணீர் அவர் பாதகமலங்களை நனைத்தது. பத்து ரூபாயை அவர் காலடியில் காணிக்கையாகச் சமர்ப்பித்துவிட்டுத் தமிழில் கையெழுத்து ஒன்று போட்டுக் கொடுக்கும்படி வேண்டிக்கொண்டேன். அவர் போட்டுக் கொடுத்த தமிழ்க் கையெழுத்துக்குப் பத்து ரூபாய்தானா மதிப்பு அட்சர லட்சம் பெறும் கையெழுத்தல்லவா அது? 

□ □ □