பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5

சென்ற 1947-ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 'சாவி'யின் வாழ்க்கையில் அத்தகைய அருமையான சந்தர்ப்பம் நேர்ந்தது. அதைப் பயன்படுத்திக்கொள்ளும் ஆற்றலும், அதிர்ஷ்டமும் அவருக்கு இருந்தன.

"நவகாளிக்குப் போகிறீர்களா?" என்று கேட்டதும் ஒரு கண்மும் யோசியாது, "போகிறேன்" என்று உடனே ஒப்புக் கொண்டார்.

காரியம் யோசிக்க வேண்டிய காரியம்தான். நவகாளி என்று சொன்னாலே அப்போதெல்லாம் உடம்பு நடுங்கிற்று. உள்ளம் பதைத்தது. மனிதர்கள் செய்வார்கள் என்று எண்ண முடியாத பயங்கரமான பைசாசச் செயல்கள் அந்தப் பிரதேசத்தில் நடந்திருந்தன. பத்திரிகைகளில் படிக்கும்போதே குலைநடுக்கம் உண்டாயிற்று.

அத்தகைய பயங்கரப் பிரதேசத்துக்கு மகாத்மா காந்தி பிரயாணப்பட்டார்.

"கிராமம் கிராமமாகக் கால்நடையாக நடந்து செல்வேன். அன்பு மதத்தையும், அஹிம்சா தர்மத்தையும் பரப்புவேன்!" என்று சொன்னார்.

பலர் சந்தேகப்பட்டார்கள். வேண்டாம் என்று தடுத்தார்கள். 'காரியம் கைகூடாது; வீண் அபாயத்துக்கு உட்படுகிறீர்கள்' என்று சொன்னார்கள். வழக்கம் போல மகாத்மா இந்தத் துக்கிரி வார்த்தைகளுக்கெல்லாம் செவி கொடுக்கவில்லை. தமது அந்தராத்மாவின் குரலுக்கே செவி சாய்த்தார். நவகாளிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

“என்னுடைய இலட்சியங்களுக்குக் கீழ்வங்காளத்தில் கடும் சோதனை ஏற்பட்டிருக்கிறது. இதற்கு முன் இத்தகைய ஒரு பெரும் சோதனையில் நான்