பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

நவகாளி யாத்திரை


எந்தப் பக்கத்தில் நின்று பேசுகிறேனோ அந்தப் பக்கத்திலுள்ளவர்கள் மட்டும் நிச்சப்தமாயிருக்கிறார்கள். வேறு பக்கம் போனதும் அதுவரை பேசாமலிருந்தவர்களும் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இப்போது நான் அடுத்த பக்கம் போகிறேன். ஆகையால், இங்கே உள்ளவர்கள் பேசாமல் இருக்க வேண்டும்!" என்றார். அப்போது அமைதியாக இருந்த கூட்டத்தில் எழுந்த சிரிப்பின் அலையோசை அடங்குவதற்கு ஐந்து நிமிட நேரம் ஆயிற்று; மேலும் மகாத்மாஜி, "நீங்கள் யாவரும் அமைதியாக இருக்க வேண்டும். அன்பின் காரணமாகத்தான் நீங்கள் இப்படி லட்சக்கணக்கில் என்னைச் சூழ்ந்துகொண்டு ஆரவாரம் செய்கிறீர்கள். அன்புக்கு அறிகுறியாக வேறு எவ்வளவோ காரியங்கள் செய்யலாம். ஆகையால், நாளைய தினம் என்னை ஆலயத்துக்குள் போக முடியாதபடி கோயிலருகில் கூட்டம் போட்டு இடைஞ்சல் செய்ய வேண்டாம். நான் போகுமிடத்துக்கு என்னை யாரும் பின்பற்றி வரவேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார்.

ஆனால், மகாத்மாஜியை மற்றெல்லா விஷயங்களிலும் பின்பற்றும் பொது ஜனங்கள் அவர் போகுமிடங்களையும் பின்பற்றத்தான் செய்தனர்!

★ ★ ★

றுநாள் 3-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை; காலை ஆறு மணியிலிருந்தே மதுரைவாசிகளும், வெளியூர் வாசிகளும் மகாத்மாஜி தங்கியிருந்த சிவகங்கை பங்களா வாசலை முற்றுகையிட்டு விட்டார்கள். தெருவெல்லாம் வண்டி போக முடியாதபடி கூடியிருந்தார்கள். கோயிலுக்கு வெளியே மாசி வீதிகளையும்