பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6

ஈடுபட்டதில்லை. இந்தப் பரீட்சையில் நான் தேறாமல் போனால் அது அஹிம்சா தர்மத்துக்குத் தோல்வியாகாது. அஹிம்சைக் கொள்கையை ஸ்தாபிக்க நான் கடைப் பிடித்த முறைதான் தோல்வி அடைந்ததாகும். இப்போது நான் தோல்வி அடைந்தாலும் பிற்காலத்தில் தோன்றப்போகும் உத்தமர்களும், மகான்களும் இந்த முயற்சியில் வெற்றி பெறுவார்கள் என்பது நிச்சயம்" என்று மகாத்மா காந்தி நவகாளி யாத்திரையின்போது கூறினார்.

ஆனால், உண்மையில் அஹிம்சைக் கொள்கையும் தோல்வியடையவில்லை; மகாத்மா கடைப்பிடித்த முறையும் தோல்வி அடையவில்லை. நவகாளியில் மகாத்மா ஆரம்பித்த அஹிம்சா இயக்கம் புதுடெல்லியில் ஜனவரி 30-ஆம் தேதி பூர்த்தியாயிற்று.

பலாத்காரம் தோற்றது; கொடுமை தோற்றது; துவேஷம் தோற்றது; சமூகவெறி தோற்றது; நாதுராம் கோட்ஸேயும் படுதோல்வி அடைந்தான்.

அன்பு வெற்றி பெற்றது; அஹிம்சை வெற்றி பெற்றது; அஹிம்சா மூர்த்தியான காந்திஜி வெற்றி பெற்றார்; சந்தேகமேயில்லை. இந்திய தேசமெங்கும் வசிக்கும் பாமர முஸ்லிம் மக்களின் மனோநிலையை இன்று கேட்டறிந்தால் அஹிம்சையின் வெற்றி எவ்வளவு மகத்தானது என்று அறியலாம்.

'அன்பு அன்பை வளர்க்கிறது. துவேஷம் துவேஷத்தை வளர்க்கிறது' என்பது காந்தி மகானுடைய கொள்கை. 'துவேஷத்தைப் பதில் துவேஷத்தினால் வெல்ல முடியாது. துவேஷத்தை அன்பினாலேதான் வெல்ல முடியும்' என்பது அவருடைய சமய சித்தாந்தம். கல்கத்தா படுகொலை, நவகாளி பயங்கரம் இவற்றுக்குப் பிறகு ஏற்கனவே அன்பும், சகோதர பாவமும்