பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

நவகாளி யாத்திரை


மகாத்மாவின் தீர்மானத்தை அறிந்தபோது அவர்கள் எத்தகைய மனோ வேதனைக்குள்ளாயிருப்பார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை அல்லவா?

அக்டோபர் 28-ஆம் தேதியன்று நவகாளி நோக்கிப் புறப்பட்ட காந்தி மகாத்மா வழியில் கல்கத்தாவில் சில தினங்கள் தங்கினார். அப்போது வங்காளத்தில் சுஹர்வர்த்தியின் தலைமையில் முஸ்லிம் லீக் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

காந்திஜி கல்கத்தாவில் தங்கியிருந்தபோது அவரைப் பேட்டி காணவும், அவருடன் ஆலோசனை நடத்தவும் அவரைத் தேடிப் பல தலைவர்கள் விஜயம் செய்தார்கள். பண்டித ஜவஹரும், சர்தார் வல்லபாயும், மெளலானா ஆஸாதும் இன்னும் பலரும் மகாத்மாஜியின் இருப்பிடத்தை நாடி வந்து ஆலோசனை நடத்திவிட்டுச் சென்றார்கள்.

வங்காளப் பிரதமர் ஜனாப் சுஹர்வர்த்தி சாகிப் மகாத்மாவைப் பல தடவை சந்தித்துப் பேசினார்.

நவகாளியில் முஸ்லிம் லீகர்களின் 'நேரடி நடவடிக்கை'யின் பெயரால் பல கிராமங்கள் தீப்பற்றி எரிந்து, பல உயிர்ச் சேதங்களும், பல கோடி ரூபாய்களுக்குப் பொருட் சேதங்களும் ஏற்பட்டிருந்தன அல்லவா? இதைக் கேள்வியுற்ற பீகார் இந்துக்கள் வெகுண்டு அங்குள்ள முஸ்லிம்களைப் பழிவாங்கும் உணர்ச்சியுடன் கொள்ளையிலும், கொலையிலும் ஈடுபட்டார்கள். பண்டித ஜவஹரும், சோஷலிஸ்டு கட்சித் தலைவர் ஜயப்பிரகாசரும் இந்தச் செய்தியைக் கேள்வியுற்றதும் பீகாருக்கு விரைந்து சென்று அங்கே