பக்கம்:நவகாளி யாத்திரை.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

நவகாளி யாத்திரை


வங்காள பாஷை தெரியாத காரணத்தால் மகாத்மாஜி கல்கத்தா யூனிவர்ஸிடி புரொபலர் நிர்மல் குமார் போஸைத் துணையாக அழைத்துக் கொண்டார். பாபுஜிக்குப் பணிவிடைகள் புரியும் பொருட்டுத் திருமதி மது காந்தியும், திரு. பரசுராமனும் அவருடன் சென்றார்கள். ஸ்ரீராம்பூரில் மகாத்மாஜி ஏறக்குறைய ஒரு மாத காலம் தங்கியிருந்த பிறகு 1947 ஜனவரி 22-ஆம் தேதியன்று 7.30 மணிக்கு அடுத்த ஊருக்குப் பிரயாணமானார்.

மகாத்மாஜி கால்நடையாகவே இரண்டு மாத காலம் யாத்திரை செய்தார்; தினசரி காலை 7.30 மணிக்குக் கிளம்பி அடுத்த ஊருக்குப் பிரயாணம். அங்கே 9 மணி முதல் 2 மணி வரை ஸ்நானம், ஆகாரம், ஓய்வு. பிறகு 2 மணி முதல் 4 மணி வரை நூல் நூற்றல். வருகிறவர்களுடன் பேசுதல், படிப்பு - பிறகு 4.45 முதல் 5.15 வரை ஊரைச் சுற்றிப் பார்வையிடுவது - அப்புறம் 5.15 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம்.

நவகாளியில் மகாத்மாவின் அன்றாட அலுவல்கள் இவ்வளவுதான். முதல் யாத்திரையில் முப்பது கிராமங்களும், இரண்டாவது யாத்திரையில் பதினெட்டுக் கிராமங்களும் ஆக நாற்பத்தெட்டுக் கிராமங்களைச் சுற்றிப் பார்த்த பிறகு டாக்டர் சையத் மகம்மது பீகாருக்கு வரும்படி அழைத்ததற்கிணங்க மகாத்மா பாட்னாவுக்குப் பயணமானார்.

பீகாருக்கு புறப்பட்ட சமயம் மகாத்மா நவகாளி மக்களிடம், "நான் சீக்கிரமே நவகாளிக்குத் திரும்பி வந்து விடுவேன்; நான் இங்கே தொடங்கிய காரியம் இன்னும் பூர்த்தியாகவில்லை" என்று கூறிப் புறப்பட்டார். ஆனால்