பக்கம்:நவக்கிரகம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - நவக்கிரகங்கள்

சொல்வதுண்டு. ஒரு சூரியனே ஒவ் - همه ساله வொரு மாதத்திலும் வெவ்வேறு "متحمسي بنتيجته. கோலம் பூண்பதல்ை பன்னிரண்டு ஆதித்தர்களாகத் தோற்றுகிருன் என்று கொள்வது ஒரு மரபு.

தேவர்களுக்காக அமுதம் கடைந்த போது, ராகு மறைவாக வந்து, அமு தத்தை உண்டான். அதைக் கண்டு, சூரியனும் சந்திரனும் மற்றவர்களுக் குக் காட்டினர்கள். அப்போது ராகு துண்டிக்கப்பட்டான். அந்தக் கோபத் தால் சூரியனையும் சந்திரனேயும் ராகு பீடிக்கத் தொடங்கினன். ராகுவில்ை கிரகணம் அடைந்த கதிரவன், நான் அமரரின் பொருட்டுத்தானே ராகு வின் பகைமைக்கு ஆளானேன்? அவர் களுக்கு நன்மை செய்த எனக்கு இப் போது தீங்கு உண்டாக, அவர்களில் யாரும் ஏனென்று கேட்கவில்லை. இனி என் முழு வெம்மையையும் காட்டி, உலகை எரித்துவிடுகிறேன்' என்று சினங்கொண்டு மறைந்தான். அவன் மறைந்திருந்த போதிலும் உலகமெங் கும் ஆற்றுவதற்கரிய வெப்பம் உண் டாயிற்று. அதனே உணர்ந்த முனிவரும் தேவரும் பிரமதேவனிடம் சென்று முறையிட்டார்கள். பிரமதேவன் வெப்பத்தின் காரணத்தை உணர்ந்துகொண்டான். இப்போது இருக்கும் வெப்பம் பெரிது அன்று. இனிமேல் கதிரவன் உதயமானல் உலக முழுதும் வெந்து சாம்பலாகிவிடும். ஆனல் அப்படிச் சாம்பலாகும்படியான கிலே வரப்போவதில்லை. காச்யபருக்கு வினதையினிடம் பிறந்த அருணன், கதிரவன் கதிர்களைத் தாங்கிக்கொண்டு அந்த வெம்மையை மறைப்பான்' என்று கூறினன். அவ்வாறே அருணன் செங்கதிரோனுடைய தேர்முன் அமர்ந்து, அவனுடைய ஒளியைத் தான் இழுத்துக்கொண்டு மறைத்தான். அதல்ை வெய்யோனுடைய வெம்மை தணிந்தது."

துருவாசர் உபதேசித்த மந்திரத்தைப் பரீட்சிக்கும்பொருட்டு, கன்னி யாக இருந்த குந்திதேவி, சூரியனை நினைந்து, அதை ஜபித்தாள். உடனே பானுமூர்த்தி அவள்முன் தோன்றி, அவள் கன்னிமையை மாற்றி, அளவ ளாவினன். அப்போது கர்ணன் பிறந்தான். கதிரவன் அவளே மீண்டும் கன்னி ஆக்கிச் சென்ருன். கர்ணன், சூரியன் புதல்வளுதலின் அக்கதிர வனுக்குரிய கவச குண்டலங்களுடன் பிறந்தான்.

గానిష్లో சூரியன்: ஒரு பழைய ஓவியம்

1. மகாபாரதம், ஆதிபர்வம், 24-ஆம் அத்தியாயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/13&oldid=1006448" இலிருந்து மீள்விக்கப்பட்டது