பக்கம்:நவக்கிரகம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

நவக்கிரகங்கள்

வணங்கும் வழக்கத்தை யாவரும் அறிவார்கள். தை மாதப் பிறப்பாகிய மகர சங்கராந்தியன்று சூரியன் உருவை நிலத்தில் எழுதிப் பூசை புரியும் வழக்கம் இன்றும் இக்காட்டில் இருந்து வருகிறது. சூரியனைச் சூரிய நாராயணன் என்று பாராட்டுவர். அவன் திருமாலின் அம்சம் என்பதே காரணம்.

தமிழ் நாட்டில் சூரியனுக்குத் தனியே கோயில்கள் இருந்தன. காவிரிப்பூம்பட்டினத்தில் சூரியன் கோயில் இருந்தது. அதை இளங்கோவடிகள் 'பகல்வாயில், உச்சிக் கிழான் கோட்டம்'[1] என்று சொல்கிறார். கீழ்த் திசையில் உள்ள சூரியன் கோயில் என்பது இதன் பொருள்.

சோழ நாட்டில் சூரியனர் கோயில் என்ற தலத்தில் சூரியனுக்குத் தனிக் கோயில் உண்டு. ஒரிஸ்ஸாவில் கோனர்க் (கோணார்க்கம்)[2] என்னும் இடத்தில் கதிரவன் கோயில் இருக்கிறது.

சூரியனுடைய திருவுருவத்தைக் குறிக்கும் தியான சுலோகங்கள் சில உண்டு. அவற்றிலிருந்து சூரிய மூர்த்தியின் உருவ இயல்பை அறியலாம். விஷ்ணு புராணம் முதலியவற்றிலும் இந்த வருணனேயைக் காணலாம். அந்த வருணனைகளில் சில வேறுபாடுகள் இருக்கும். ‘நவக்கிரக ஆராதனம்' என்ற வடமொழி நூலில் உள்ளவை வருமாறு:[3]

சூரியன் சிவந்த வண்ணமுடையவன். செம்மலரைச் சூடியிருப்பான். செம்மலர் மாலையும் செவ்வாடையும் அணிந்திருப்பான். செக்நிறக் குடையும் கொடியும் கொண்டு, ஒளி வீசும் தேரில் ஏறி வருவான். பதுமாசனத்தில் கிழக்கு முகம் நோக்கி, இரு புஜங்களே உடையவனாய்த் தாமரை மலரை ஏந்தி வீற்றிருப்பான். கடகமும் குண்டலமும் அணிந்திருப்பான்.

நவக்கிரகக் குழுவில் நடுவே, வட்டவடிவமான மண்டலத்தில் ஆவாகனம் செய்யப் பெறுவான்.

சூரியனுக்கு அதிதேவதை அக்கினி: அக்கதிரோனுக்கு வலப்பக்கத் தில் மேஷவாகனத்தின்மேல் மூன்று கைகளும் மூன்று கால்களும் உடைய வகை எழுந்தருளியிருப்பான்.

சூரியக்கிரகத்தின் பிரதியதிதேவதை ருத்திரன். சூலமும் தமருகமும் தாங்கிய இரண்டு கரங்களுடன் சூரியனுக்கு இடப்பக்கத்தே இருப்பான். விஷ்ணு புராணம், மங்களமான முகரோமங்களே உடையவன்: மாலையும் ஆடையும் செம்மைநிறம் உடையவை. ஒளிபடரும் முகம்: கான்கு கை கவசம் அணிந்திருப்பான், இடக் கையைத் தண்டி என்னும் எவலாளன்மேலும், வலக்கையைப் பிங்களன் என்பவன்மேலும் வைத் திருப்பான். மற்ற இரண்டு கரங்களில் கேடயமும் சூலமும் தாங்குவான். அவன் கொடி, சிங்கம்' என்று சூரியனை வருணிக்கிறது.

1.

2..

திது

3.

  1. கனாத்திறம் உரைத்த காதை, 10, 11.
  2. எகிப்தில் 'கார்நாக்' என்ற இடத்தில் சூரியன் கோயில் ஒன்று இருக்கிறது.
  3. இதையே ஆதாரமாகக் கொண்டு ஓவியர் ராஜம், படத்தை வரைந்திருக்கிறது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/17&oldid=986520" இலிருந்து மீள்விக்கப்பட்டது