பக்கம்:நவக்கிரகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன்

பொருந்த வான்உறை நாள்களை நாள்தொறும் புணர்வோன் அருந்த வானவர்க் காரமு தன்புடன் அளிப்போன் திருந்த வானவர்க் கரியவன் செஞ்சடை முடிமேல் இருந்த வானவன் பெருமையை யார்கொலோ இசைப்பார்? செம்பொன் மால்வரை மத்தினிற் பணிவடம் பிணித்திட்டு உம்ப ரானவர் தானவ ருடன்கடைந் திடவே தம்ப மானதும் அன்றி.அத் தழல்விடம் தணிய அம்பு ராசியின் ஆரமு துடன்அவ தரித்தோன்.

-வில்லிபுத்து ரார் பாரதம்.

இவக்கிரக மண்டலத்தில் சூரியனுக்கு அடுத்தபடி வருபவன் சந்திரன். சூரியனேயும் சந்திரனேயும் சேர்த்து வழங்குவது மரபு. வெங்கதிரோன் என்று சூரியனைச் சொல்லுவர்; சந்திரனைத் தண்கதிரோன் என்று கொண் டாடுவர். உணவு, பயிர், அமுதம், இன்பம், கவிதை, காதல், தண்மை, பாற்கடல், குமுதமலர், சோமலதை, கள், பெண் ஆகிய இன்பப் பொருள் களோ ட்ெல்லாம் தொடர்புடையவன் சந்திரன். அவனே விரும்பாத மக்களே இல்லை. அவனுக்கு லோகப்பிரியன் என்று பெயர் இருக்கிறது.

யாவரும் விரும்பும் சந்திரன் அழகன், பெண்டிர் உள்ளம் கவர்பவன். அவனேக் குழந்தைகள் முதல் கிழவர் வரையில் யாவரும் விரும்புகிருர்கள். அவனிடமிருந்து வரும் அமுதத்தை அமரர் நுகர்கின்றனர்; பிதுர்த் தேவ தைகள் உண்ணுகின்றனர். அவளுல் பயிர்கள் வளர்கின்றன: கடல் பொங்குகிறது: கவிதை உணர்ச்சி ஊறுகிறது. பாட்டி சொல்லும் கதை யில் அவன் எல்லோருக்கும் பிரிய மானவ னைதற்கு ஒரு காரணம் கற் பனேயாக வருகிறது. குழந்தைகளின் உள்ளத்தைக் குளிரவைக்கும் கதை - . برای اولیه

ஆண்டு முதிர்ந்த அன்னே ஒருத் திக்கு நான்கு குழந்தைகள் இருந்தார் கள். சூரியன், சந்திரன், வருணன், வாயு என்ற அந்த நான்கு பேர்களும் ஒரு நாள் ஒரு செல்வர் வீட்டில் நடந்த விருந்துக்குப் போனர்கள். அவர்கள் விருந்துக்குப் பு ற ப் படு ம் டோ து அன்னே அவர்களிடம், அங்கே பரி மாறும் பட்சணங்களில் ஏதாவது எனக்குக் கொண்டுவாருங்கள்' என்று சொல்லி அனுப்பினுள்.

கான்கு பேரும் விருந்துண்ணச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/19&oldid=1006400" இலிருந்து மீள்விக்கப்பட்டது