பக்கம்:நவக்கிரகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 நவக்கிரகங்கள்

சூரியன் முதலிய நாலு பிள்ளைகள்

வானத்தில் இருந்த ஸோமனேக் காயத்திரியின் உதவியால் அமரர்கள் பூமிக்குக் கொண்டுவந்தார்களென்று சதபதப் பிராம்மணத்தில் ஒரு செய்தி வருகிறது,

தைத்திரியத்தில் வேறு ஒரு கதை இருக்கிறது. பிரஜாபதிக்கு முப் பத்து மூன்று பெண்கள். அவன் அவர்களே ஸோமனுக்கு மணம் செய்து கொடுத்தான். அவர்களில் ரோகிணியிடம் மாத்திரம் ஸோமன் அன்பு வைத்து, மற்றவர்களைப் புறக்கணித்தான். அவர்கள் அதல்ை சினம் கொண்டு, தம் தந்தையை அணுகி முறையிட்டார்கள். பிரஜாபதி ஸோம னேக் குறை கூறவே, அவன் யாவரிடமும் ஒத்த அன்புடன் இருப்பதாக உறுதி கூறினன். ஆனல் அவ்வாறு செய்யவில்லை. அதனல் உடல் குறைந்த வனனன். அப்பால் தன் மனேவியருடைய உதவியைக் கொண்டு செங்கதி ரோனே அணுகித் தன் குறையினின்றும் நீங்கின்ை.

தைத்திரீயத்தில் வேறு ஒரு கதை உண்டு. பிரஜாபதி மூன்று வேதங்களையும் வெளிப்படுத்தினன். அவற்றை ஸோமன் கைப்பற்றிக் கொண்டு சென்றுவிட்டான். பிரஜாபதிக்குச் சாவித்திரி என்றும் சிரத்தை என்றும் இரண்டு பெண்கள் இருந்தார்கள். ஸோமன் சிரத்தையை விரும்பின்ை. சாவித்திரியை விரும்பவில்லை, இந்தச் செய்தியைச் சாவித்திரி தன் தந்தையிடம் சென்று முறையிடவே பிரஜாபதி ஒரு வழி செய்தான். ஒரு பச்சிலைச் சாற்றினல் சாவித்திரியின் நெற்றியில் திலகம் இட்டு, ஸோமனிடம் செல்லுமாறு அனுப்பின்ை. அப்போது அவள் அழகு, ஸோமன் உள்ளத்தைக் கவர்ந்தமையால் அவன் அவளை வலிய வந்து காதலித்தான். தன்பால் இருந்த மூன்று வேதங் களையும் மீட்டும் பிரஜாபதியினிடம் அளித்துவிட்டுச் சாவித்திரியைக் கைப்பற்றிச் சென்ருன். : -

1. ஸாமவேதம், முகவுரை: எம். ஆர். ஜம்புநாதன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/21&oldid=1006449" இலிருந்து மீள்விக்கப்பட்டது