பக்கம்:நவக்கிரகம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் 15

ஸோமளுகிய சந்திரன் செல்வத்தை அளிப்பவன். வீரர்களிடம் எழுச்சியை உண்டாக்குபவன். தேவர்களுக்குத் தேவனுய் விளங்கு கிறவன். தேவர்கள் ஸோமனேப் பருகுகிரு.ர்கள். சோதியும் உலகமும் மலேகளும் செடி கொடிகளும் சூழ விளங்குபவன் அவன்." இவ்வாறு யஜுர் வேதத்தில் ஸோமனுடைய புகழ் கிலவுகிறது. ஸோமனே! துதியை விரும்பும் வனஸ்பதியான ,ே நாங்கள் அழியாமல் இருக்கும்படி எங்கள் உயிரை வலிபெறச் செய்க. தேவர்களுக்குப் பிரமனுகவும் கவிகளுக்குத் தலைவனுகவும் அந்தணர்களுக்கு முனிவனுகவும் விலங்குக ளுக்கு மகிஷனுகவும் கழுகுகளுக்குக் கருடனகவும் காட்டுக்குக் கோடரி யாகவும் விளங்குகிருய். கானம் செய்கிருய். தூய்மையிலே செலுத்து கிருய்' என்று ஒரு மந்திரம் சொல்கிறது. சுக்கில யஜுர்வேதத்தில் ஓரிடத்தில், ஸோமனே. இனியதும் மிக்க இன்பம் அளிப்பதுமாகிய தாரையுடன் நீ பாய்க. இந்திரன் நுகரும் வண்ணம் நீ அமுதம் பொழி கிருய். நீ பகையை அழிப்பவன்; எல்லா மக்களுக்கும் நண்பன் என்று பொருள் தரும் மந்திரங்கள் இருக்கின்றன. -

ஸோமனே, போரில் உன்னே வெல்ல முடியாது. போரிலே காப்பவன் .ே எங்கள் இருக்கைக்குக் காவலன் .ே வலிமைக்கும் உயிர்ப்புக்கும் துணைவன் .ே பெரிய பொருளிலே புலப்படுபவன். நல்ல இடத்தை உடையவன். கற்புகழுடன் பகையை வெல்பவன்' என்றும், ஸோமனே. நீ இந்தப் பச்சிலைகள், இந்தப் பசுக்கள், இந்த ர்ேகிலே ஆகியவற்றை உண்டாக்கினய், அகல்வானத்தை விரிப்பவனும் தோன். உன் சுடரால் இருளேப் போக்குகிருய் என்றும் அந்த மறை பாடுகிறது.8

3

- புராணங்களில் சந்திரனேப்பற்றியுள்ள கதைகள் பல. இதிகாச மாகிய பாரதத்தில் பல இடங்களில் அவனேக் காண்கிருேம். சந்திர&னத் தம்முடைய குல முதல்வகைப் பெற்றவர்கள் பாண்டவர்கள். வில்லிபுத் தாரார் ஆதிபருவத்தின் தொடக்கத்திலே சந்திரனுடைய புகழைப் பாடுகிருர் ‘எங்கள் இறைவனகிய திருமாலின் இருதயத்திலே பிறந்தவன்; காள்தோறும் வானில் உள்ள கட்சத்திர மங்கையரைக் கூடிக் குலவுபவன்; வானவருக்கு அமுது அளிப்பவன், சிவபெருமான் திருமுடிமேல் இருப்பவன்; பாம்புகளின் மூச்சுக் காற்றினல் மயங்கிக் கிடந்த பூமியைத் தன்னுடைய அமுத நிலவைப் பொழிந்து, வெப்பம் நீங்கித் தண்மையடையச் செய்தவன்; தேவர்கள் அமுது கடைந்தபோது, துணுக கின்றதோடு, அதில் தோன்றிய ஆலகால விஷத்தின் கொடுமை

கிருஷ்ண யஜுர்வேதம்: அதுவர்கம், 24. டிெ, அதுவாகம், 32.

அதுவாகம், 43,

அதுவாகம், 129

அதுவாகம், 185.

அதுவாகம், 40 0.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/22&oldid=584236" இலிருந்து மீள்விக்கப்பட்டது