பக்கம்:நவக்கிரகம்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 நவக்கிரகங்கள்

தணியும்படி அக்கடலில் அமுதுடன் அவதரித்தவன்; பதினறு கலைகளை உடையவன்; சூரியனிடத்தில் அக் கலைகளேக் கொடுத்து, மறுபடியும் பெற்றுக்கொள்பவன்; அத்திரி முனிவர் கண்ணிலும் அக்கினியிலும் தோன்றினவன்; வேதமந்திரங்களைச் சொல்லி, அந்தணர்கள் போற்றி வழிபடும் பெருமையை உடையவன்; புதன் என்னும் புதல்வனைப் பெற்றவன்' என்பவை அவர் பாடலால் அறியப்பெறும் செய்திகள், !

அத்திரி முனிவர் தவம் புரிய, அவர்பால் இருந்த உயிர்க் கரு, யோக வலிமையால் மேல்நோக்கி எழுந்தது. அது கண்வழியே தோன்ற, அதனேப் பிரமதேவன் தொகுத்து, விமானத்தில் இட்டான். அது உயிர்பெற்று, ஸோமன் என்ற பெயருடன் விளங்கியது. தண்ணிய ஒளியும் துளியும் உடைய ஸோமனிடத்திலிருந்து சிந்திய அமுதத் துளியி லிருந்து பயிர்களும் பச்சிலைகளும் தோன்றின. ஸோமன், சிவபெருமானே நோக்கித் தவம் புரிந்து, ஒன்பது கோள்களில் ஒருவனைன். அந்தன ருக்கும் பயிர், மூலிகைகள் ஆகியவற்றிற்கும் தலைவனைன். சிவ பெருமான் திருவிழிகளில் ஒன்ருகவும், அப்பெருமான் திருமுடிக்கண்ணே அணியும் அணிகலனாகவும் விளங்கலானன். இது காசி காண்டத்தில் உள்ள கதை. -

தட்சனுடைய பெண்களான அசுவதி முதலிய இருபத்தேழு பேர் களைச் சந்திரன் மணந்தான். தன் மனைவியர் எல்லோரிடமும் ஒத்த அன்பு வைக்காமல் கார்த்திகையினிடமும் ரோகிணியினிடமும் மிகுதியாகக் காதல்கொண்டு ஒழுகினன். அதல்ை துன்புற்ற மற்ற கட்சத்திர மங்கையர், தம் தங்தையாரிடம் முறையிடவே, 'உனக்கு கூடியரோகம் உண்டாகுக!” என்று தட்சன் சபித்தான். அதனால் நாளுக்கு ஒரு கலியாகத் தேயத் தொடங்கின்ை. பிறகு சிவபிரானுடைய அருளால் தேய்ந்த கலைகள் மறுபடியும் வளாப்பெற்ருன். அதுமுதல் அவன் கலைகள் தேய்ந்தும் வளர்ந்தும் வருகின்றன.

தட்ச யாகத்தில் சிவபெருமானுடைய காலால் தேய்க்கப்பெற்றவன் சந்திரன். கந்த புராணம் முதலிய புராணங்களில் இந்த வரலாறுகளைக் காணலாம். -

ஒரு சமயம் நாரதர், சிவபெருமானிடம் ஒரு மாங்கனியைக் கொண்டு வந்து கொடுத்தார். அதைக் கணபதி, தமக்குத் தரவேண்டுமென்று கேட்டார். அப்போது சந்திரன், கணபதியைக் கண்டு ககைத்தான். விநாயகர் அவனுக்கு ஒளியிழக்கவும், மேனி நிலை மாறவும் சாபமிட்டார். சங்திரன், தன் பிழை பொறுக்க வேண்டுமென்று பணிந்து வேண்டவே,

"ஒரு நாள் மாத்திரம் சண்டாளத்துவம் அடைவாய்' என்று அருளினர். ஆவணி மாதம் வளர்பிறைச் சதுர்த்தியன்று அவனைப் பார்த்தால் தோஷம் உண்டாகும் என்று சொல்வார்கள். 'காலாம்

பிறைச் சந்திரனேக் கண்டவர்கள் நாய் பட்டபாடு படுவார்கள்' என்று இச் செய்தி பழமொழியிலும் ஏறிவிட்டது. -

1. குருகுலச் சருக்கம், 1-6.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/23&oldid=584237" இலிருந்து மீள்விக்கப்பட்டது