பக்கம்:நவக்கிரகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் - 17

சந்திரன் ஒஷதிகளுக்குத் தலைவன். பல ராஜகுய யாகம் செய்த பயனகப் பிருகஸ்பதியின் தேவியாகிய காரையோடு கலந்து இன்புற்ருன்.

அப்போது புதன் அவர்களுக்குச் சேயாய் உதித்தான். தன்னுடைய தகாத செய்கையால் சந்திரன் சாபம் பெற்ருன். தேவாசுர யுத்தம் உண்டாயிற்று. அதன்பின் தாரை மீண்டும் பிருகஸ்பதியினிடம் சென்ருள். இவனுடைய கலையை முதல் பதினேந்து நாள் தேவர்களும், பின் பதினேந்து நாள் தென்புலத்தாரும் அருந்துவர். சூரியனது சுழுமுனை என்னும் கதிரால் ஒளிபெறுகிறவன் சந்திரன்,

சந்திரனுக்குக் கலைஞான பாதன் என்ற குமாரன் ஒருவன் உண்டு. 5ற்குணமும் வெண்ணிறமும் தென்கிழக்கும் சந்திரனுக்கு உரியவை. இவனுடைய தேருக்கு மூன்று சக்கரங்கள் என்றும், அத் தேரில் பூட்டியவை குருந்த மலர் நிறமுடைய குதிரைகள் பத்தென்றும் கூறுவர்.'

4. திருக் கோயில்களில் நவக்கிரகங்களில் ஒன்ருக இருப்பதோடு, தனியே பரிவார தேவதைகளிலும் ஒருவகைச் சந்திரனே வைத்து, வழி படுவது வழக்கம். அவனுடைய திருவுருவத்தை அமைப்பதற்குரிய இலக் கணங்களே ஆகமங்கள் சொல்கின்றன. சந்திரனைத் தியானிப்பதற்குரிய சுலோகங்கள் சில உண்டு. அவற்றிலும் தண்கதிரவனுடைய உருவ வருணனையைக் காணலாம். சந்திரமூர்த்தியை, வீற்றிருக்கும் திருக்கோலத் திலும் வழிபடலாம்: நின்ற கோலத்திலும் திருவுருவமைத்துப் பூசிக்கலாம். சந்திரன் சிங்காதனத்தில் எழுந்தருளியிருப்பான். அவனுடைய நிறம் தூய வெண்மை. அவன் தலையைச் சுற்றி ஒளிவட்ட மாகிய பிரபை திகழும். பல்வகை அணிகள் புனைந்தவன். பன்னிற மலர்மாலையை அணிந்தவன். வெள்ளே ஆடை உடுத்திருப்பான். குமுதத்தை ஏந்திய இரண்டு திருக்கரங்களே உடையவன். திருமார்பில் பொன்னூல் இழை திகழும். எழில் ஒழுகும் திருமுகமும் அமைதி தவழும் பார்வையும் உடையவன் தண்கதிரோன்."

சிற்ப ரத்தினம் என்ற நூல், சந்திரனத் தேரில் அமர்ந்த கோலத்தில் காட்டுகிறது. பத்துக் குதிரைகள் பூட்டிய தேர் அது. சந்திரமூர்த்தியின் வலத்தே காந்தியென்னும் தேவியும், இடப்புறத்தே சோபை என்னும் தேவியும் வீற்றிருப்பர். திருத்தேரின் மேலே இடப்பக்கத்தில் சிங்கக் கொடி அசையும். . . . . -

பூர்வகாரண ஆகமம், சந்திரனுக்கு அருகே ரோகிணி வீற்றிருப்பதாகச் சொல்கிறது. * - -

நவக்கிரக ஆராதனம் என்னும் நூல், சந்திரனே வழிபடும் முறைகளை விரிவாகச் சொல்கிறது. அதில் உள்ள தியான சுலோகத்தினல் சந்திர னுடைய திருக்கோலம் புலனுகிறது. அக்கினி திக்கில் பத்துக் குதிரைகள்

1. அபிதான சிந்தாமணி, - 2. Hindu Iconography by T. A. Gopinatha Rao,

தவ-3 . . . . . .",

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/24&oldid=584238" இலிருந்து மீள்விக்கப்பட்டது