பக்கம்:நவக்கிரகம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i8 நவக்கிர்கங்கள்

பூட்டிய தேரில் சந்திரன் எழுந்தருளியிருப்பான். அத் தேருக்கு இரண்டு சக்கரங்கள். சதுரமான பீடத்தில் கதாயுதத்தை ஏந்தி, அவன் வீற்றிருப் பான். தண்மை அவன் இயல்பு. வெண்மை அவன் வண்ணம். அவன் ஆடையும் வெள்ளியது. திருமுடி தரித்திருப்பான். அமுதமயமாக விளங்குபவன். கர்க்கடக ராசிக்கு அதிபதி. சூரியனுக்கு அக்கினி திசையில் இருப்பவன். -

சந்திரனுக்கு அதிதேவதை நீர் பிரத்யதிதேவதை கெளரி.

பூ முத்துஸ்வாமி தீட்சிதர் சந்திரமூர்த்தியைப்பற்றிப் பாடிய கீர்த்தனத்தில், அவன் லோகபாலர்களால் துதிக்கப் பெறுபவன்; தாரையின் நாயகன்; நான்கு புஜங்களை உடையவன்; மன்மதனுக்குக் குடையாக இருப்பவன்; விராட்புருஷனது மனத்தில் தோன்றியவன்; பிரம்மாவுக்கும் முருகனுக்கும் முகமாக இருப்பவன்' என்று சொல்கிருர்.

நவக்கிரக ஸ்தோத்திர சங்கிரகம் என்ற நூாவில் சந்திரனுக்குரிய பெயர் கள் இருபத்தெட்டைப் பார்க்கலாம். அமுதத்தை உண்டாக்குவதால் அவனுக்குச் சுதாகரன் என்ற பெயர் உண்டாயிற்று. குமுதமலரை மலர்த்துவதால் குமுதப்பிரியன் என்ற காமம் அமைந்தது. முயல் போன்ற கறையை உள்ளே உடைமையால் சசி, சசாங்கன், சசதரன் ஆகிய பெயர்கள் ஏற்பட்டன. அந்த முயலே, மானென்றும் சொல்வ துண்டு. ரோகிணியின் நாயகளுதலால் ரோகிணிபதி என்றும், பணியை உண்டாக்குதலால் ஹிமகரன் என்றும், அந்தணர்களுக்குத் தலைமை பூண்பதால் த்விஜ ராஜன் என்றும், இரவைச் செய்வதால் கிசாகரன் என்றும், அத்திரியினிடம் உதித்தமையால் ஆத்திரேயன் என்றும், மூலிகைகளுக்கு வளர்ச்சியைத் தருவதால் ஒஷதீசன் என்றும், கலைகளே உடைமையால் கலாநிதி என்றும், திருமகளோடு பாற்கடலில் உதித்த மையால் ரமாப்ராதா என்றும், கட்சத்திரங்களே மனேவியராகப் பெற்ற மையால் கட்சத்திர நாயகன், உடுபதி என்றும் அவனுக்குப் பெயர்கள் வழங்குகின்றன. -

சிவபெருமானுக்குரிய எட்டு மூர்த்தங்களில் சந்திரனும் ஒருவன்.

- 'அருகிலேய திங்களாய் ஞாயிருகி" என்று அப்பர் சுவாமிகள் பாடுகிருர். இறைவனுடைய திருமுடியிலே பாலசந்திரன் திகழ்கிருன். ... "

'பிறைநுதல் வண்ணமாகின்று' - -

என்பது புறநானூறு. அவனுடைய இடக்கண்ணுக விளங்குகிருன். அம்பிகை

சந்திரம்.ண்டலத்தினிடையே அமுதமயமாய் விளங்குகிருள். அதனல் அப் பிராட்டிக்குச் சந்திரமண்டல மத்யகா என்ற திருநாமம் வழங்குகிறது. சந்திர வம்சத்தில் உதித்தவர்கள் பாண்டிய மன்னர்கள். சந்திர மூர்த்திக்கு விருப்பமான மொழி, தமிழ். அவனுக்குரிய உலோகம் ஈயம், அவனுடைய விருப்பத்துக்குரிய மணி முத்து. கெல் அவன் தானியம். வெள்ளே அல்வி அவன் மலர். அவன் விரும்பும் தின்பண்டம் முறுக்கு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/25&oldid=584239" இலிருந்து மீள்விக்கப்பட்டது