பக்கம்:நவக்கிரகம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்திரன் 19


சந்திரன் - ஒரு பழைய ஓவியம்

யோகிகள், இடைகலேயாகிய மூச்சைச் சந்திர கலை என்பர். யோகத் தில்ை மூலாதாரத்து அக்கினியை எழுப்பி, ஆறு ஆதாரமும் கடந்து, சந்திர மண்டலத்திலே தாக்கச் செய்து, அப்போது வரும் அமுதத்தைப் பரு கினல் ஆனந்தம் உண்டாகும் என்பர்.

5 - தமிழ் நூல்களில் மேலே, சொன்ன செய்திகளில் சிலவற்றைக் காண லாம். சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகள் தொடங்கும்போதே,

"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்

கொங்கலர் தார்ச்சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்கண் உலகளித்த லான்' - என்று திங்களைப் போற்றுகிரு.ர். பூம்புகார் நகரில் சந்திரனுக்கென்று தனியே ஒரு கோயில் இருந்ததாம். அதை கிலாக்கோட்டம் என்று ஆசிரியர் குறிக்கிருர் சந்திரனத் தொழுது காண்பது தமிழர் வழக்கம். அதல்ை அதைத் தொழுது காண்பிறை' என்று ஒரு புலவர் பாடு கிரு.ர். - - - அகப்பொருள் துறைகளில் ஒன்று, பிறை கொழுகென்றல்' என்ற பெயரோடு உள்ளது. ஒரு மங்கைநல்லாள் பிறர் அறியாதபடி ஒரு காதலனோடு அளவளாவுகிருள். அவளுடைய தோழி, அவளுடைய வேறு

1. குறுந்தொகை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/26&oldid=1006450" இலிருந்து மீள்விக்கப்பட்டது