பக்கம்:நவக்கிரகம்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 நவக்கிரகங்கள்

கொள்ளுதல், சக்தியை ஆயுதமாக ஏற்றல் முதலியவை முருகனுக்கும் அங்காரகனுக்கும் உள்ள ஒற்றுமைகள். -

அங்காரகனுக்குரிய திருகாமங்கள் பல. அவன் செவ்வண்ண மேனியை கினேப்பூட்டுபவை லோகிதாங்கன், ரக்தாயதேrணன், ரக்தவர்ணன் என்னும் பெயர்கள். அவன் வேலேந்துவதனுல் சக்திதரன் என்ற பெயர் அமைந்தது. அழகுத் திருவுருவ முடைமையால் குமாரன் என்றும், பெரிய திருமேனி படைத்தமையால் மகாகாயன் என்றும், மங்கல உருவளுதலின் மங்கலனென்றும், செல்வத்தைத் தருதலின் தனப்ரதன் என்றும், பொற் குண்டலம் அணிந்தமையால் ஹேமகுண்டலி என்றும் பெயர் பெற்ருன். குண ஹர்த்தா, ரோகக்ருத், ரோகாசனன், வித்யுத்ப்ரபன், வ்ரண கான், காமதன், தன ஹ்ருத், ஸாமகான ப்ரியன், ரக்த வஸ்த்ரன், க்ரக நாயகன், ஸர்வ கர்மாவ போதகன், ரக்தமால்யதரன் ஆகிய நாமங்களும் அங்காரகனுடைய பலவகை இயல்புகளைக் குறித்து கிற்கின்றன. -

பழங்காலத்தில் ரோமர்கள் செவ்வாயைப் போர்க் கடவுளாகக் கொண்டாடினர்; தங்களுடைய குல முதல்வன் என்று பாராட்டினர், அவனுக்கு அங்கங்கே கோயில்கள் இருந்தன. மார்ஸ் என்ற பெயர் ரோமில் செவ்வாய்க்கு வழங்கியது.

4. செம்மேனிப் பெருமாளுகிய அங்காரகன் மேவு வாகனத்தின் மேல் முக்கோணப் பீடத்தில் எழுந்தருளியிருக்கும் கோலத்தில் ஒவியம் அமைந்திருக்கிறது. மூன்று திருக்கரங்களிலும் சக்தி, சூலம், கதை என்னும் ஆயுதங்களைத் தாங்கி, ஒரு கரத்தால் அபயக் தருகிருன் அங்காரகன். அவனுக்குரிய ராசிகளை ஓர் ஓரத்தில் உள்ள ஆடும் தேளும் காட் டு கி ன் ற ன. பின்னல் மேருமலே இருக்கிறது. செவ்வாய், அம்மலையை வலம் வரும் செய்தியை இது கினேப்பூட்டுகிறது. முழங்காலின்மேல் ஒரு கையை வைத்திருக்கும் குஜனுடைய கண்கள் சிவப்பாக இருக்கின்றன. திருமுடியில் செம்மணிகள் முன்னே தோன்று கின்றன. அவன் திருச்செவியில் இடப்பக்கத்தே அதிதேவதையாகிய கிலமகள் இருக்கிருள். பிருத்வி என்பதையே இத் திருவுருவம் காட்டு கிறது. rேத்ரபாலன் செவ்வாய்க் கிரகத்தின் பிரத்தியதி தேவதை. வலப் பக்கத்தில் உலகையாளும் மன்னனைப்போல அத் தேவதையைக் காணலாம். அவன், பயிரையும் பசுவையும் பாதுகாக்கிறவன் என்பதை அத் திருவுருவத்திலிருந்தே தெரிக் துகொள்ளலாம்.

செங்கண்ணன் செம்மேனிச் செல்வன்செம் மாலையின்ை

அங்கையில்வேல் சூலம் அடற்கதைகொள் - மங்கலத்தான் மோதுந் தகரேறும் மூர்த்தி கிலமகட்குக் - - காதற்சேய் அங்கார கன். -

1 நவக்கிரக ஸ்தோத்திர சங்கிரகம், நாராயணராம ஆசார்யர் வெளியீடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/35&oldid=584249" இலிருந்து மீள்விக்கப்பட்டது