பக்கம்:நவக்கிரகம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புதன் -

31 空

புதனுக்குக் கிரகபதி என்றும் ஒரு பெயர் உண்டு. அவன் சிங்க வாகனம் உடையவன். மஞ்சள் கிற மலர் மாலே வேய்ந்தவன். பொன் னணி பல பூண்டவன். பொன்னிற மேனிப் பொலிவினன். கோங்கு மல ரைப்போன்ற நிறம் உடையவன். மஞ்சள் கிற ஆடை புனைந்தவன்.

அவனுக்குக் கரங்கள் நான்கு வலக்கரம் ஒன்றில் வரதமும் மற்றக் கரங்களில் வாளும் கேடகமும் கதையும் ஏந்துபவன். விஷ்ணு தர்மோக் தரம், புதன் விஷ்ணுவைப்போலத் தோற்றுவான் என்றும் கூறுகிறது." பூரீமுத்துசாமி தீட்சிதர், தாம் இயற்றிய கீர்த்தனையில் புலப்படுத்தும் புத பகவான், தேவர்களால் துதிக்கப் பெறுபவன்; சந்திரனுக்கும் தாரைக்கும் திருமகன்; புலவர் தெரிந்து போற்றும் பிரான்; அந்தணரால் உவகை பெறுபவன்; சீரும் செல்வமும் வழங்குவோன்; குஜனுக்குப் பகை வன்: மணிபதித்த திருமுடியினன்: மணிமாலை, மணிவலயம், மணிக் காப்பு இவற்றை அணிந்தவன்; மிதுன ராசிக்கும் கன்னியா ராசிக்கும் தலைவன்: புத்தகத்தைக் கையில் கொண்டவன்; ஆணும் பெண்ணும் அல்லாத உருவினன்; அடியவர் போற்றும் புகழினன்; சிவனடியார் கலங் களே விரும்புபவன்; எப்போதும் ஆனந்தத்துடன் இருப்பவன்.

இளேயும் அவள் தோ ழியரும்

I, Hindu Iconography by T. A. Gopinatha Rao.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/38&oldid=1006462" இலிருந்து மீள்விக்கப்பட்டது