பக்கம்:நவக்கிரகம்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 - நவக்கிரகங்கள

ஒரு சமயம் அந்தகாசுரன் என்பவன் தேவர்களோடு அமர் செய் தான். அமரர் அசுரர்களேக் கொன்று குவித்தனர். அது கண்ட அந்தகா சுரன் சுக்கிராசாரியனிடம் சென்று, தேவரீர் வந்து காப்பாற்ருவிட்டால் காங்கள் பிழைப்பது அரிது" என்று முறையிடவே, சுக்கிரன் அவ்வாறே. போர்க்களம் சென்று மிருத சஞ்சீவினி மந்திரத்தால் இறந்த அசுரர்களே எழுப்பினன். மீண்டும் போர் கடுமையாக நடைபெற்றது. இது கண்ட தேவர்கள் வெருவி, நந்தியினிடம் முறையிட்டுக்கொண்டார்கள். கந்தி தேவர் சிவபெருமானிடம் சென்று, "எம்பெருமானே, தேவரீர் அருளிய மந்திரத்தைக் கொண்டு பார்க்கவன் இறங்க அசுரர்களே யெல் லாம் எழுப்பிவிடுகிருன். அதனல் தேவர்களுக்கு வலிமை குறைகிறது. அவர்கள் இனி உய்வது அரிது” என்று கூறினன். சிவபிரான் உடனே சுக்கிரனே அழைத்துவரச் செய்து அவனே விழுங்கித் தன் திருவயிற்றிலே இருக்கும்படி செய்தருளினன். அப்பால் அந்தகாசுரனுக்கும் தேவர்களுக் கும் பெரும் போர் கிகழ்ந்தது. இறைவன் திருவயிற்றில் இருந்தபடியே சுக்கிரன் யாவற்றையும் பார்த்துக்கொண் டிருந்தான். இறைவன் அருளால் அந்தகாசுரன் அழிந்தான்.

சிவபெருமான் திருவயிற்றில் இருந்த அசுர குரு அங்கே ஆயிரம் ஆண்டு யோகத்தில் இருந்தான். அதன் பின் இறைவன் அருள் கூர்ந்து அவனே வெளியே வரச் செய்தான். அப்படி வெளிவரும்போது அவன் அாய வெண்ணிறத்தோடு வந்தமையால் அவனுக்குச் சுக்கிரன் என்னும் பெயர் உண்டாயிற்று. இறைவன் திருவயிற்றில் பல காலம் இருந்தமை யால் அவனே யாவரும் வழிபட்டுப் போற்றத் தொடங்கினர்."

2

- தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்ட பொழுதெல்லாம் இறந்த அசுரர்களே மிருத சஞ்சீவினி மந்திரத்தால் எழுப்பி வந்தான் சுக்கிரன்.

தேவகுருவாகிய பிருகஸ்பதிக்கு அந்த மந்திரம் தெரியாமையால் இறந்த தேவர்களே அவரால் எழுப்ப இயலவில்லை. அசுரர் கட்சி வர வர வலிமையுற்றது. இதற்கு என்ன செய்யலாம் என்று அமரர் யோசித்தனர். பிருகஸ்பதியின் புதல்வகிைய கசனே அணுகி, நீ சுக்கிரனிடம் சென்று அவனுடைய திருமகளாகிய தேவயானியின் உள்ளம் உவக்கும்படி கடந்து வந்தால் மிருத சஞ்சீவினி மந்திரத்தை நீ அவனிடமிருந்து பெறலாம்' என்று சொல்லி அனுப்பினர். -

அவன் சுக்கிரனிடம் மாணவகைச் சேர்ந்தான். தேவயானிக்கு வேண் டிய மலர் முதலிய பொருள்களைக் கொடுத்து. அவள் உள்ளத்தைக் கவர்க் தான். கசன், தம் பகைவர் கட்சியிலிருந்து வந்தவன் என்று கண்டு அசுரர் கள் அவனைக் கொன்றனர். சுக்கிராசாரியன் அவனைச் சஞ்சீவினி மந்திரக் தால் எழுப்பின்ை. இப்படி இரு முறை நடைபெற்றது. முன்ருவது முறை

1. காசி காண்டம், சுக்கிரன் உலகம் கண்ட அத்தியாயம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/47&oldid=584261" இலிருந்து மீள்விக்கப்பட்டது