பக்கம்:நவக்கிரகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்கிரன் 43

சுக்கிரன் அவ்வாறே போர்க்களம் சென்று . . . .

"நான் அல்லவா உண்மையான சுக்கிரன்!” என்று கூறி வாதிட, அவுணர் அவன் கூற்றை நம்பவில்லை.

பிறகு தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் மூண்டது. அசுரர் களுக்குத் தோல்வி உண்டாகும்படி செய்து, வியாழ பகவான் மீட்டும் அமரருடன் சேர்ந்துகொண்டார். அப்போதுதான் அசுரர்களுக்கு உண்மை விளங்கியது. சுக்கிரனே அடைந்து, தாங்கள் செய்த பிழையைப் பொறுத்து, மீட்டும் தங்களுக்கு ஆசிரியராக இருந்து அருள் செய்ய வேண்டுமென்று வேண்டிக்கொண்டனர். அப்படி வேண்டுகையில் தம் முடன் பிரகலாதனையும் அழைத்துக்கொண்டு சென்ருர்கள். அவனை முன்னிட்டுக்கொண்டு சென்று சுக்கிரனே வேண்டவே, பார்க்கவன் அவர்கள் வேண்டுகோளை ஏற்றுப் பழையபடி அவுனரின் குலகுருவாக இருந்து அவர்களுக்கு உதவி புரியலானன். * * - .

1. அபிதான சிந்தாமணி,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/50&oldid=1006484" இலிருந்து மீள்விக்கப்பட்டது