பக்கம்:நவக்கிரகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுக்கிரன் 47

திருமாலால் அதுக்கிரகிக்கப் பெற்ற ஒரு கண்ணே உடையவன், முடியணிக் தவன், இருபது ஆண்டுகளே உடைய தசையைப் பெற்றவன், பண்டிதன், களத்திர பாவத்திற்கு அதிபதி, சூரியனுக்கும் பிருகஸ்பதிக்கும் பகைஞன், ராஜ்யத்தைக் கொடுப்பவன், எல்லாத் தத்துவங்களேயும் அறிந்தவன், விருஷப துலா ராசிகளுக்கு அதிபதி, அசுரர்களுக்கு நன்மையை உபதேசிப் பவன் என்றும் பிறவாறும் அவனேப் போற்றுகிரு.ர்.

"சுக்கிர தசை அடிக்கிறது என்பது தமிழில் பழமொழியாக வழங்கு கிறது. அதிலிருந்து சுக்கிரன் நல்ல பலகீன அருள்வான் என்ற கம்பிக்கை மக்கள் உள்ளத்தில் இருப்பது புலகிைறது.

- 5 இந்தப் புத்தகத்தில் உள்ள மூவண்ண ஒவியத்தில் சுக்கிரன் சாந்த மூர்த்தியாகக் காட்சி அளிக்கிருன், வெண்திருமேனியும் வெண் குடையும் உடையவனுக விளங்குகிருன். சடையும் முடியும் நாற்கரங் களும் அந்தக் கரங்களில் அட்சமாலையும், வரதம், கமண்டலம், தண்டம் என்பனவும் உள்ளன. ஒரு கண் சற்றே மங்கியிருத்தல் வாமனுவதாரக் கதையை கினேப்பூட்டுகிறது. அவனுடைய தேர் ஐந்து கோணங்களே உடையதாகவும் எட்டுக் குதிரைகளேப் பூண்டதாகவும் இருக்கிறது. வலப் பக்கத்தில் மேகமண்டலத்தில் வீற்றிருக்கும் கோலத்தில் இருக்கும் மங்கை அதிதேவதையாகிய இந்திராணி. இடப்புறத்தில் மேகத்திடையே தோன்றுபவன் பிரத்தியதி தேவதையாகிய இந்திரமருத்துவன். கீழே மூலையில் உள்ள தராசும் விடையும் சுக்கிரன் துலாராசிக்கும் இடப ராசிக்கும் உரியவன் என்பதைக் குறிக்கின்றன. .

பின்னலே மேருமலையின் ஒரு பகுதி தோன்றுகிறது. மேருவை வலம் வருபவன் சுக்கிரன்.

வல்லவுணர் தம்குரவன் மாய்ந்தார் உயிர்பெறவே சொல்லுமனு வைஅறிவான்; சுக்கிரன்என்-றெல்லவரும் சாற்றும் பெரியான்; சடைமுடியான் மாரிக்கோள்: போற்றுவெள்ளி என்றே புகல்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/54&oldid=584268" இலிருந்து மீள்விக்கப்பட்டது