பக்கம்:நவக்கிரகம்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராகு

so". விப்பிரசித்தி என்ற அசுர 影 ဂ္ယီပီး - னுக்கும் சிம்ஹிகை என்பவளுக்கும் மகளுகப் பிறந்தவன் ராகு. தேவர் களும் அசுரர்களும் சேர்ந்து திருப் பாற் கடலைக் கடைந்தார்கள். அதி லிருந்து அமுதம் உண்டாயிற்று. அதைத் தேவரும் அசுரரும் உண்ணு வதற்கு முந்தினர்கள். அப்பொழுது திருமால், பெண் உருவம் எடுத்தார். ராகு-பழைய படத்திலிருந்து மோகினி என்ற பெயரோடு யாவர் உள்ளத்தையும் மயக்கும் பேரெழி லோடு அந்தப் பெண் விளங்கிள்ை. தேவருக்கு மாத்திரம் அமுகத்தைக் கொடுக்க வேண்டும் என்று எண்ணிய மோகினி, அசுரர்களிடம் இனிமை யான பேச்சுக் கொடுத்து, வரிசையாக உட்காரும்படி சொன்னாள். அவர் கள் கான் முந்தி, நீ முந்தி என்று போட்டி போட்டுக்கொண்டு அமர்வ தற்குள் தேவர்களுக்கு அமுதம் வழங்கி விட்டாள். இதனே அறிந்த ராகு என்னும் அசுரன் தேவ உருவத்தை எடுத்துக்கொண்டு சூரியனுக்கும் சந்திரனுக்கும் நடுவிலே இருந்து அமுதத்தை உண்ணத் தொடங்கின்ை.

அவன் அசுரன் என்பதை அறிந்த சூரியனும் சந்திரனும் ராகுவை மோகினிக்குக் குறிப்பாகச் சுட்டிக் காட்டினர்கள். உண்மையை உணர்ந்த மோகினி, தன் கையில் உள்ள சட்டுவத்தால் அடித்தாள். திருமாலுக்குரிய சக்கரத்தால் அவன் தலையை அறுத்தாள்.

அமுதத்தை உண்ட அசுரனுடைய தலை, மலேயின் கொடுமுடியைப் போலப் பெரிதாக இருந்தது. அது நிலத்தின்மேல் விழும்போது தரை முழுவதும் பூகம்பம் உண்டானுற்போல அதிர்ந்தது.'

தலையுடன் இரண்டு கைகளும் சேர்ந்து விழுந்தன. மற்றப் பகுதி தனியே வேறு இடத்தில் விழுந்தது. தலையும் கைகளும் சேர்ந்த பகுதி பர்ப்பர தேசத்தில் விழுந்தது. பைடீனஸன் என்பவன் ஸிம்ஹிகையுடன் அங்கே போய்க்கொண் டிருந்தான். அவர்கள் இருவரும் ராகுவாகிய அவனைத் தம் அரண்மனைக்குக் கொண்டுபோய் வளர்த்துவந்தனர்."

அமுதம் உண்டமையால் ராகு சாவாமல் வளர்ந்தான். சூரிய சந்திரர்கள் தன்னைக் குறிப்பித்த காரணத்தால் அவர்களிடம் அவனுக்குப் பகை மூண்டது. அவர்களைப் பீடிக்கத் தொடங்கினன். கிரகணம் எனபது அதுதான,

r

-- - - 云

می همگانیسمی

جم ہیتہ. " اسمه f2 డ డ 'ష* Taడా **.逸 *

1. மகாபாரதம், ஆதிபர்வம், 19-ஆம் அத்தியாயம். 2. Hindu Pantheon by Moore, p, aco. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/61&oldid=1006781" இலிருந்து மீள்விக்கப்பட்டது