பக்கம்:நவக்கிரகம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூ சி ய ன்

'நீ ஒளி, நீ சுடர், நீ விளக்கம், நீ காட்சி. மின்னல், இரத்தினம், கனல், தீக்கொழுந்து

இவை எல்லாம் நினது திகழ்ச்சி. கண் கினது வீடு. - புகழ், வீரம் - இவை நினது லீலை. அறிவு கின் குறி, அறிவின் குறி .ே நீ சுடுகின்ருய், வாழ்க! நீ காட்டுகின்ருய், வாழ்க! உயிர் தருகின்ருய்; உடல் தருகின்ருய்.

வளர்க்கின்ருய்; மாய்க்கின்ருய். 'நீர் தருகின்ருய்; காற்றை வீசுகின்ருய், வாழ்க!

-பாரதியார்

ஒ_லகுக்கே கண்ணுகவும் கண்கண்ட தெய்வமாகவும் விளங்குபவன் கதிரவன். அவனுடைய புகழை உலகில் இதுகாறும் வாழ்ந் திருந்த மக்கள் பலவகையில் விரித்துப் பேசி யிருக்கின்றனர். வேதம் அவனே வாழ்த்துகின்றது. வேதாங்கங்களில் கண்ணேப்போன்ற சோதிட நூ ல் அவனேயே நடுநாயகமாகக் கொண்டு வழிபடுகிறது. இதிகாசங் களும் புராணங்களும் சூரியனுடைய புகழையும் வரலாற்றையும் பல வகையில் எடுத்துச் சொல்கின்றன. சூரியனைப்பற்றிய மந்திரங்களும் துதிகளும் பல உண்டு. அவனுடைய உருவ வருணனை, செயல்கள், அவனே வழிபடுவதனால் உண்டாகும் - பயன்கள் ஆகியவற்றைப்பற்றிய செய்திகள் பல, வடமொழி நூல் களில் வந்திருக்கின்றன.

தமிழிலும் செங்கதிரவனேப் புக மும் பாடல்கள் பல உண்டு. சங்க காலப் புலவர் முதல், கம் காலத்தில் வாழ்ந்த பாரதியார் வரையில் அவ னேப் பாடியிருக்கிருர்கள்.

சூரியனேயே முழு முதற் கடவு ளாகக் கொண்டு வழிபட்ட சமயம் ஒன்று இருந்தது. அதற்குச் செளரம் என்று பெயர். இன்றும் உலகத்தில் சில நாட்டினர் ஞாயிற்றை வழிபட்டு வருகின்றனர். கணித வகையில் சூரியனைத் தலைமையாக வைத்துக் கணிக்கும் முறைக்குச் சூரிய சித்தாங்

சூரியன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/8&oldid=1006439" இலிருந்து மீள்விக்கப்பட்டது