பக்கம்:நவக்கிரகம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நவக்கிரகங்கள்

தம் என்ற பெயரும் அவ்வகை அளவுக்குச் செளரமானம் என்ற பெயரும் வழங்குகின்றன.

விஞ்ஞானிகள் சூரியமண்டலத்தைப்பற்றியும் குரியனுடைய கிரணங்களப்பற்றியும் செய்துள்ள ஆராய்ச்சிக்குக் கணக்கு வழக்கே இல்லை. இன்னும் செய்துகொண்டே வருகின்றனர்.

கவிஞர்கள், சூரிய உதயத்தையும் குரிய அஸ்தமனத்தையும் காவியங் களினிடையே அழகுபெற வருணித்திருக்கிருர்கள். வடமொழி, தென் மொழி நூல்களில் இப்படி அமைந்த வருணனேகள் மிகப் பல. காவியத் துக்கு உறுப்பென்று, அலங்கார இலக்கணம் வரையறுத்துக் கூறுவன் வற்றுள் சூரிய உதயமும் சூரிய அஸ்தமனமும் சேர்ந்தவை.

பாரத நாட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமன்றி மற்ற நாட்டில் உள்ளவர்களுக்கும் சூரியன் சிறப்புடையவன். அவனைப்பற்றி அந்த அந்த காடுகளில் வழங்கும் கதைகளும் வழிபாட்டு முறைகளும் எண்ணிக்கையில் அடங்குவன அல்ல. கதிரவனுடைய கதிர்களேப்போல அவனுடைய புகழ் பரந்திருக்கிறது; அவனேப் பாடாத மொழி இல்லை; வனங்காத மக்கள் இல்லை. - -

2

சூரியனைப்பற்றிய மந்திரங்கள் வேதத்தில் பல இடங்களில் வருகின்றன. ரிக்வேதம் மூன்றுவித அக்கினிகளில் ஒருவகைக் கதிரவனே வருணிக்கிறது. அவனுக்கு ஏழு பெயர்கள் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு காரணத்தால் வந்த பெயர். இருளே அழித்து, ஒளியுடன் பகஆர் தருவதால் சவிதா என்ற பெயரும், உலகையெல்லாம் தன் ஒளியால் ஒளிரச் செய்வதால் பகன் என்ற பெயரும், ஒளியில்ை இருளைப் போக்கிப் பூமியை உரமுடைய தாக்குவதால் பூஷா என்ற பெயரும், தன் கதிர்களால் மூவுலகங்களையும் அளப்பதால் விஷ்ணு என்ற பெயரும், இரவில் தன் கதிர்களாகிய ரோமத்தை மடக்கிக்கொண்டு செல்வதால் கேசி என்ற பெயரும், உலக முழுவதும் உள்ள மக்கள், ஒருங்கே புகழ் வதால் வைசுவாரன் என்ற பெயரும், செவ்வொளி படைத்த காளேயாக வானில் ஏறுவதால் விருஷாகபி என்ற பெயரும் பெறுகிருன். உதயத் துக்குமுன் உஷையையும். கண்பகலில் சூர்யாவையும், மறைந்தபின் விரு ஷாக பாயியையும் தன் மனேவிகளாகக் கொள்கிருன். அவனுக்குரிய தேவதைகள் அசுவினி தேவர்கள். - - - -

யஜுர்வேதத்தில் பல இடங்களில் சூரியனின் புகழ் வருகிறது. ஓர் துவாகத்தில், நீ வெற்றியுடையாய் எல்லாவற்றையும் காண்பவன்; சோதியை ஆக்குபவன்; எவ்வுலகையும் ஒளிரச் செய்கிறவன்' என்ற சூரியனுடைய பெருமையைக் காணலாம்.: - -

1. வேதசந்திரிகை எம். ஆர். ஜம்புநாதன் எழுதியது. பக்கம் 57-58.

2: யஜுர்வேதம்: அதுவாகம், 73. . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவக்கிரகம்.pdf/9&oldid=584223" இலிருந்து மீள்விக்கப்பட்டது