உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நவநீதப் பாட்டியல்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi அவைகளுக்குரிய சூத்திரங்கள் யாப்பருங்கல விருத்தியில் காணப் படுகின்றன. இவ்வொற்றுமையோடு பிறவற்றையும் நோக்கும் போது யாப்பருங்கல விருத்திக்குப் பிற்பட்டது நவநீதப்பாட்டியல் என்பது போதரும். இந்நூல் வச்சணந்திமாலையையும் நோக்கி யியற் றியதாகலாமாதலின், அதற்குச் சிறிது பிற்பட்டதென்று கருதலாம். வேறொரு காரணமும் இங்கே எடுத்துக்காட்டுதற்கு உரியது. பிரபந்தங்கள் 96 என்ற வரையறை கி.பி. 1732ல் இயற்றப் பெற்ற சதுரகராதியில் உள்ளது. இவ்வகராதிக்கு முற்பட்டது எனக் கருதத்தகும் 'பிரபந்த மாபியல்' என்ற நூலில்,

'பிள்ளைக் கவிமுதல் புராண மீறாத் தொண்ணூற் றாறெனுந் தொகைய தாமுற் பகரியன் முன்னுறப் பாடும் பிரபந்த மரபியலதுபிர பந்தமர பியலே.'

என வருகின்றது. இதன்கண்ணும் பிரபந்தங்களின் எண் வரை யறையைக் காணலாம். கி.பி.1535ல் வாழ்ந்தவன் என்றறியப் படும் சிவந்தெழுந்த பல்லவராயன் மீது பாடப்பெற்ற உலாவில் தொண்ணூற்றாறு கோலப்ர பந்தங்கள் கொண்டபிரான்' ... என்று கூறப்படுகின்றது. இதனால் 14-ஆம் நூற்றாண்டின் முற்பகுதி யிலேயே இந்த எண் வரையறையைப் புலவருள் ஒரு சாரார் மேற் கொண்டனர்.17-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் எழுந்த இலக்கண் விளக்கப் பாட்டியல் இவ்வரையறையைக் கூறவில்லை; இங்ஙனமே 16- ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த பரஞ்சோதிமுனிவரும் தமது சிதம்பரப்பாட்டியலில் இவ்வரையறையைக் குறிப்பிடவில்லை. ஆகவே, இவ்வெண் வரையறை பெரும்பாலார்க்கு உடன்பாடு இல் லாத ஒரு காலமும் இருந்தது எனத் தோன்றுகிறது. இவ்வுடன் பா டற்ற காலத்திற்கு மிக முன்பு பிரபந்தங்கள் பலப்பல பாட்டியல் நூல்களில் விளக்கப்பட்டுவந்தன. இங்ஙனம் பிரபந்தங்கள் தோன்றி வரவர எண் பெருகி வந்த காலம் ஒன்றும், வரையறை எய்திய கால மொன்றும், உடன்பாடற்ற காலம் ஒன்றும், பெரும்பாலார் உடன் பட்ட காலம் ஒன்றுமாக வகுத்தல் கூடும். இவ்வகுப்பு முறையும் நவநீதப் பாட்டியல் எண் பெருகி வந்த காலப்பகுதியைச் சார்ந்தது