பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மனிதருக்குத் தோழன் 103.

வடிவேலன் : என்னடா சொல்றே...உண்மையாவா?

கோமளா ஏண்டா...நாகராஜன் ஐயாவோட வீட்டு:

காயை அடிச்சு காலை முறிச்சிருக்கிறியே. அது உனக்கு என்ன பாவம் செய்தது? நீச்சல் குளத்துல: மூழ்கப்போன ஒன்னை ஓடிவந்து காப்பாத்தித், தூக்கி வந்ததே! அதற்கு பிரதியுபகாரமா காலை ஒடிச்சியா... ரொம்ப கல்லா இருக்குதுடா.

மோகன் : அம்மா! அப்பா... தயவு செய்து நான் சொல். றதை ஒருநிமிஷம் கேளுங்கப்பா.பள்ளிக்கூடத்துல இருந்து நண்பர்களோடு வந்துகிட்டே இருந்தேன். சந்தோஷமா பேசிக்கிட்டே வரும்போது அந்த நாய் எதிரே வந்தது. எந்த நாய் எதுன்னு கவனிக். காம வழக்கம்போல கல்லெடுத்து எறிஞ்சேன். கால்ல அடிபட்டு, கொண்டிகொண்டி கத்திக்கிட்டே அந்த காய் ஓடிடுச்சு. என் நண்பர்கள் எல்லோரும், நான் குறிதப்பாம அடிச்சேன்னு பாராட்டுனங்க. அங்கே போனதும், என்னைக் காப்பாத்துன நாயைத் தான் நான் அடிச்சேன்னு தெரிஞ்சுதும், பதறிப்போய் ஆஸ்பத்திரிக்கு ஒடினேன்.

ஆஸ்பத்தியில என்ஜினப் பார்த்ததும் அந்த நாய். குலைக்கலேம்மா...கடிக்க வரலேம்மா...என்னை அன்பா பார்த்தது. பயம் தெளிஞ்சு நான் பக்கத்துல போய் தடவிக் கொடுத்தேன். அது. காவால தடவி என் கைமேல தலைவச்சு படுத்து கிடுச்சும்மா...காலை ஒடிச்ச என்னை கடிக்கலேம்மா..: என்னை நண்பன பாவிச்சு..தலைவச்சுப்படுத்ததைப் பார்த்ததும் எனக்கு ரொம்ப அவமானமா போயி, டுச்சு. இனிமே எந்த மிருகத்துக்கும் துன்பம் தர்ரதில்லேன்னு முடிவு பண்ணிட்டேன். அந்த, நாய் என் நண்பன்ம்மா...என் ஆருயிர் தோழன்.