பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 எஸ். நவராஜ் செல்லையா

குமார் : (அவசரத்துடன்) என்ன சொன்னுரு?

மோகன் அரையாண்டு தேர்வில, வகுப்பில் நீ முதல் மார்க் வாங்கு பொங்கல் பரிசா உனக்கு புது சைக்கிளே வாங்கித் தர்றேன். அப்படின்னு சொல்லிட்டாரு. -

குமார் : புது சைக்கிளா! பலே! பலே! நீ கேட்டதோ பழைய சைக்கிள். வரப்போறதோ புது சைக்கிள். உனக்கு லாபம் தானே.

மோகன் : இலாபத்துக்கு முன்னே, அப்பா சொன்ன கருத்தைக் கவனிக்கனும். என்னல முதல் மார்க்கு வாங்க முடியாதுன்னு அப்பாவோடா நம்பிக்கை.

குமார் : கால் ஆண்டுத் தேர்விலேயும் நீதானே முதல்

மார்க்கு.

மோகன் : அதை என்னுேட அதிர்ஷ்டம்ன்னு அப்பா

சொல்ருரு.

குமார் : அதுக்கும், நீ இப்ப உட்கார்ந்து எழுதறதுக்

கும், என்ன சம்பந்தம் இருக்கு?

மோகன் : இருக்கு குமார். எல்லா பாடத்திலேயும் வருகின்ற அத்தனை முக்கிய கேள்விகளுக்கெல்லாம், பதிலை எழுதி, பத்திரமா வச்சுக்கப் போறேன். அப்புறம், முழுதையும் மனப்பாடம் பண்ணப் போறேன்.

குமார் : அப்போ இ னி மே நீ விளையாடவே,

வரமாட்டியா?

மோகன் : ஏன்? இன்னும் ரெண்டு நாள்லயே இந்த வேஜல முடிஞ்சுடும். அதுக்குப் பிறகு கவலையே யில்லே. விளையாட்டுக்கு விளையாட்டு. மார்க்குக்கு மார்க்கு. பரிசுக்குப் பரிசு. எப்படி என் திட்டம்?