பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 எஸ். நவராஜ் செல்லேயா,

அம்மா : அதுதான் எனக்குத் தெரியுமே.

மோகன் : அந்த கோட் புத்தகத்தை படிச்சாதாம்மா

முதல் மார்க் வாங்க முடியும்.

அம்மா : அதுவும் எனக்கு நல்லா தெரியுமே!

மோகன் : அந்த கோட் புத்தகத்தை நீங்க பார்த்

தீங்களா?

அம்மா : எனக்குத் தெரியாதே.

மோகன் என்னம்மா எல்லாம் தெரியும்னு சொன்னிங்க.

இப்ப தெரியாதுன்னு சொல்றிங்களே.

அம்மா : அவசரப்படாம தேடு. எங்கே போயிடப்

போகுது. இங்கேதான் எங்கேயாவது இருக்கும்.

மோகன் எல்லா பக்கமும் பார்த்தாச்சே! எனக்கு

என்ன பண்றதுன்னு ஒன்னுமே புரியலியே.

அம்மா : கிதானமா உட்கார்ந்து, நிஜனச்சு பாரு. இன்னைக்கு பூரா எங்கெங்கே போனே, எங்கெங்கே உட்கார்ந்தெ? யார் கூட பேசிப் பழகுனெ?

மோகன் : வகுப்பிலே உட்கார்ந்திருக்கும்பொழுது, என் கையிலே கோட் இருந்தது. சாப்பிடும்போதும் என் கிட்டவே இருந்தது. குமார் வந்து விளையாடக கூப்பிட்டான். அப்பொழுதும் என் கையிலேயே இருந்தது. அப்புறம்...அப்புறம்.

அம்மா : அவசரப்படாம யோசனை பண்ணு. அப்புறம்

என்ன செய்தேன்னு...

மோகன் : ம்...ஞாபகம் வருது. ஒரே தாகமா இருந்தது. தண்ணிர் பானையிலே தண்ணி இல்லே. அதஞல குழாயடிக்குப் போனுேம்.