பக்கம்:நவனின் நாடகங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 எஸ். நவராஜ் செல்லையா

அம்மா : என்னப்பா செய்யறது? நான் அன் ஆனக்கே சொல்லலே தவற விடுகிறது தப்பு இல்லேப்பா: தன்னுடையது இல்லேன்ன, அதை உரிய இடத்துல கொண்டுபோய் சேர்க்குறது தாம்பா துணிவுள்ள மனுஷனுக்கு அடையாளம். பள்ளிக் கூடத்துல கண்டெடுத்தா தலைமை ஆசிரியர் கிட்ட தரணும். பொது இடத்துல கிடைச்சா, போலீஸ் ஸ்டேஷன் ல தரனும்.

மோகன் : நான் செய்த தப்புக்கு இவ்வளவு பெரிய

தண்டனையாம்மா?

அம்மா : தண்டனைன்னு சொல்லலே...நீ கண்டெடுத்த பேணுவை கொண்டுபோய், தலைமை ஆசிரியரிடம் கொடுத்திருந்தா, ஒருவேளை உன்னுேட கோட்டுப் புத்தகத்தையும் யாராவது கொண்டுபோய். கொடுத்திருக்கலாம்! உன்னை மாதிரியே எல்லாம் கொண்டு போயிட்டா, எப்படியப்பா திரும்பி வரும்னு எதிர்பார்க்க முடியும்.

(கதவு தட்டும் ஒலி கேட்கிறது.)

அம்மா : மோகன்! போய்யாருன்னு பாருப்பா.

மோகன் : (கதவைத் திறந்து) வணக்கம் ஐயா! அம்மா! அம்மா! இங்கே வாங்க! எங்க தலைமை ஆசிரிய. ரும்மா.

அம்மா : வணக்கங்க. இப்படி உட்காருங்க...

(நாற்காலியில் உட்காருகிறர்.)

தலைமை ஆசிரியர் : பரவாயில்லேம்மா! இந்த நோட். புத்தகம், விளையாட்டு மைதானத்தில இருந்த,