பக்கம்:நவமணி இசை மாலை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

露 அவசரமும், பரபரப்பும், வேகமும் மிகுந்த இக்காலத்தில் மக்கள் விரைவில் பலனை எதிர்பார்க்கிருர்கள். அவர்களை ஈர்க்க என்ன வழி? இதுதான் கேள்வி. எளிதாக மக்கள் புரிந்து அனுபவிக்கக்கூடிய முறையிலே முதலில் தொடங்கினல் பிறகு பேரிமயம்போன்ற கலையை அனுபவிக்கச் செய்வது எளிது. நீரோடையிலேயே மூழ்கித் திளைக்க விரும்பாதவர்களை சமுத்திரத்தில் மூழ்கித் திளேக்க அழைப்பது விவேகம் அல்ல. கர்னுடக இசைமரபு வழுவாமல் தோற்றுவிக்கும் தமிழ்க் கீர்த்தனங்களை அநுபவிக்கச் செய்வது என்பது முதற்படி என்று நான் கருதுகிறேன். விருப்பு வெறுப்பின்றி இதனை நோக்குகிற வர்கள் உடனே ஏற்றுக்கொள்வார்கள். நான் மும்மூர்த்திகளின் இசைப்படைப்புகளுக்குப் பெரிதும் மதிப்புக் கொடுப்பவன் அவற்றை அனுபவிக்கப் புதிய தலைமுறையினரைச் செய்யத் தூண்டும் முயற்சியே நான் இதுவரை மேற்கொண்டுள்ளது என்று எவரும் அறிவார்கள். ஒடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத் தண்ணீரில் முழுகி அதன் இன்பத்தை அநுபவிக்கச் செய்துவிட்டால் பிறகு காவிரி, கங்கை, யமுனை ஆகிய மூன்று நதிகளிலும் அவர்கள் தாமாகவே சென்று திளைப்பார்கள். அவற்றின் விளைவாக நமது இணையற்ற சங்கீத சாகரத்தில் மூழ்குவதும் எளிதாகிவிடும். என்னுடைய முயற்சி ஒரு சிறு நீரோடை போன்றது. தெய்வங்கள் எங்கும் ஒடிவிடவில்லை. அவை கருணை மழை பொழிந்து கொண்டேதான் இருக்கின்றன. இறைவன் தன்னைத் தமிழில் பாடவைப்பதில் மகிழ்ச்சி கொள்ளுகின்றன். ஆகவே நமக்குப் புரிந்த ஒடையிலே மூழ்கும்படி அன்புடன் அழைக்கின்றேன். மூழ்கி இன்பங்கண்டவர்கள் அத்துடன் நிச்சயமாக நிற்கமாட்டார்கள். - - இந்த வகையிலே விறுப்பு வெறுப்பின்றி அனைவரும் நோக்கவேண்டும் என்று நான் வேண்டிக் கொள்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/10&oldid=776680" இலிருந்து மீள்விக்கப்பட்டது