பக்கம்:நவமணி இசை மாலை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} {} எதற்காக நமது ஒப்பற்ற இசைக்கலையைப் பேணி வளர்க்கும் பொருட்டாக, பேணி வளர்க்க இவன் யார் என்று சதுர் பேசுகின்ற நேர மல்ல இது. நிலைமையைத் தெளிவாக உணர்ந்து, புதிய தலை முறையினரை நமது இசைக்கடலில் திளைத்து இன்பம் பெறச் செய்வதே இன்றைய தலைமுறைக்குள்ள தலையாய கடைமை யாகும். அமெரிக்கா முதலிய மேல் நாடுகளெல்லாம் நமது இசைக் கலேயைக் கண்டு வியந்து போற்றிப்பாராட்டுகின்ருர்கள். நமது சங்கீத வித்வான்களை வரவழைத்து அவர்கள் இசைக்கலையை போற்றுகின்ருர்கள். இது நமது தனிப்பட்ட இசைக்கலைக்கு ஏற்றம் தருவதாகும். அதே வேளையில் நமது இளந் தலைமுறையினர் மட்டும் இதைக் கவனிக்காமல் இருப்பது சரியல்ல. ஒரு தலைமுறை இவற்றைக் கவனியாமல் அசட்டையாக இருந்துவிட்டால், பிறகு நமக்குத்தான் நஷ்டம் ஏற்படும். இது ஒரு சிறிது காலத்திற்கு இப்படித்தான் இருக்கும். பிறகு நமது கர்நாடக இசைக்குத் திரும்பவும் வந்து விடுவார்கள் என்று எதிர்பார்ப்பது தவருக முடிந்துவிடும். நமது சிற்பக்கலை, நமது ஒவியம், நமது கோயில்கள் உலகத் திற்கே வியப்பளிப்பதாக உள்ளன. நமது இசைக்கலையும் நாட் டியக் கலேயும் அவ்வாறே இணையற்றதாகும். இதை முதலில் நமது இளைஞர் நன்முக உணரும்படி தெளிவுபடுத்தவேண்டும். மேல் நாட்டவர் பாராட்டுகின்ருர்கள் என்பதற்காக நாமும் பாராட்ட வேண்டும் என்ற உணர்ச்சி சரியானதன்று. உண்மை யில் நமது சிற்பக்கலை, கட்டிடக் கலை போன்ற அழகுக் கலைகளை ஆனந்த குமாரசாமி, ஹேவல் போன்ற மேல் நாட்டினர் ஒரு சிலர் பாராட்டிய பிறகே நாமும் பாராட்டவேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. இதேபோல இசைக்கலையும் நடனக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/11&oldid=776691" இலிருந்து மீள்விக்கப்பட்டது