பக்கம்:நவமணி இசை மாலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 தெய்வத்தின் கிருபையால் நான் வாழ்ந்திருக்கும் போதே பல சிறந்த வித்வான்கள் கீர்த்தனைகளுக்கு இசையமைத்துக் கொடுக்க ஆர்வத்தோடு முன்வந்திருக்கிருர்கள். எந்தக் கீர்த்தனைக்கு என்ன இசையம்ைப்பு பொருந்துகின்றதோ அதை முற்றிலும் திருப்தியாக ஏற்படும் வரையில் அதை ஏற்றுக் கொள்வதும் எனக்குச் சம்மதமில்லை. பல சமயங்களில் ராகத்தையே மாற்றியிருக்கிறேன்; இசையமைப்பையும் மாற்றி யிருக்கிறேன். இவற்றிற்கெல்லாம் மிகப் பொறுமையுடனும் அன்புடனும் இசையமைப்பு வகுப்பதற்கு நன்றிகூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர்களுக்கு எவ்வளவு நன்றி கூறினும் தகும். இசையமைத்து உதவுவதில் எனது குருநாதராக விளங்கும் சங்கீத வித்வான் திரு. என். சிவராம கிருஷ்ண பாகவதர் குறிப் பிடத்தக்கவர் ஆவர். அவர் அமைத்த இசை வகுப்பே பெரும் பாலும் இந்நூலில் காணலாம். மேலும் சங்கீத வித்வான் திரு. டி. எம். தியாகராஜன், சங்கீத வித்வான் திரு. டி. கே. கோவிந்தராவ், சங்கீத வித்வான் திரு. கும்பகோணம் விஸ்வநாதன், சங்கீத வித்வான் திரு. கே. வி. நாராயணசாமி, சங்கீத வித்வான் திரு. டி. வி. சங்கர நாராயணன்,சங்கீதவிதுவி திருமதி வனஜா நாராயணன் அவர்களும் இந்நூலில் உள்ள உருப்படிகளுக்கு இசையமைப்பதில் உதவி புரிந்திருக்கிருர்கள். அவர்களுக்கும் நான் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எனது குருநாதர் திரு. என். சிவராம கிருஷ்ண பாகவதர், திரு. டி. கே. கோவிந்தராவ், திரு. கும்பகோணம் விஸ்வநாதன் இவர்களுடைய இசைச் சிறப்பையெல்லாம் முன்னமே வெளியான மூன்று நூல்களில் குறிப்பிட்டிருக்கிறேன். இடம் இன்மை குறித்து மீண்டும் எழுதப்படவில்லை. இவர்களுக்கு என்னுடைய நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். ம. ப. பெரியசாமித்துரன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/14&oldid=776724" இலிருந்து மீள்விக்கப்பட்டது