பக்கம்:நவமணி இசை மாலை.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர், டாக்டர் உயர்திரு. செம்மங்குடி சீனிவாசய்யர் அவர்கள் கீர்த்தனை அமுதம் என்ற நூலுக்கு வழங்கிய முகவுரை இசை என்பது மிகவும் உயர்ந்த தெய்விகக் கலை. அதன் மூலமாக ஆண்டவனைப் பாடித் துதித்து அவன் அருளைப் பெற்ற பெரியோர்கள் பலபேர் நம் நாட்டில் தோன்றியிருக்கிருர்க்ள். கருநாடக சங்கீதத்திற்கு என்றும் அழியாத சட்டதிட்டங்களை அமைத்துக் காப்பாற்றியவர்கள் அந்த மஹான்களே ஆவர். அவர்களில் மு. க் கி ய மாக பூரீ தியாகப்பிரம்மம், பூரீ முத்துஸ்வாமி தீட்சிதர், பூ சியாம்ா சாஸ்திரிகள் என்ற சங்கீத மும்மூர்த்திகள் நமது இசைக்கலை என்றும் மாருமல் தூய்மையோடு நிலைபெற்று நிற்க வழிவகுத்தார்கள். அவர்கள் தம் இஷ்ட தெய்வங்களை சாகித்தியங்களின் மூலமாகப் பாடி நமது இசையை என்றும் அழியாத பெரிய செல்வமாக நமக்கு விட்டுச் சென்றுள்ளார்கள். அம் மஹான்களின் வழிவழியாக சாகித்ய கர்த்தாக்கள் பலர் தோன்றி இசைக் கலையையும் கடவுள் பக்தியையும் எங்கும் பரப்பினர்கள். இம்முறையில் நமது திரு. ம. ப. பெரியசாமித்துரன் அவர்கள் மேலே குறித்த மஹான்களின் வழியைப் பின்பற்றித் தமது இஷ்டதெய்வமான முருகப்பெருமானையும், மற்றும் பல பெயர்களால் வணங்கப்படும் இறைவனைப் பேதமில்லாமலும், இனிய தமிழில் நல்ல இசை வடிவத்தில் மனமுருகிப் பாடியுள் ளார்கள். கீர்த்தனை, விருத்தம், காவடிச்சிந்து, நவராகமாலிகை முதலிய பல வகைகளில் சாகித்யங்களை இயற்றியிருக்கிருர்கள். சாகித்யங்கள் எளிதில் புரியும்படியாக எளிய, அழகிய தமிழில் அமைந்திருப்பதையும் பாராட்ட வேண்டும். இசை அமைப்பு, வர்ணமெட்டுகள் தனித் தன்மையுடனும், ராகபாவத் துடனும், லய நயத்துடனும் இருக்குமாறு பாடியுள்ளார்கள். திரு. தூரன் அவர்களுடைய குருநாதரான திரு. சிவராம கிருஷ்ணய்யர் அவர்களுக்கும் இவருக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும், ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு இசை அமைத் துள்ளதும் குறிப்பிடத் தக்கதாகும். இசை அமைப்பு அழகான முறையில் அமைந்துள்ளதன்மூலம் இதை நன்கு தெரிந்து கொள்ளலாம். - - - செம்மங்குடி சீனிவாசய்யர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/4&oldid=776848" இலிருந்து மீள்விக்கப்பட்டது