பக்கம்:நவமணி இசை மாலை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி உயர்திரு முசிறி சுப்பிரமணிய ஐயர் அவர்கள் முருகன் அருள் மணிமாலை என்ற நூலுக்கு அன்புடன் வ ழங்கிய முன்னுரை இறைவன் நாதவடிவமாக இருக்கிருன் என்பது பெரி யோர்கள் கண்டறிந்த உண்மையாகும். பூர் தியாகராஜ சுவாமி கள் நாத உபாசன மூலமாகவே இறைவனைத் தரிசித்துப் பிறவி யின் பெரும்பயனை எய்தியிருக்கிருர்கள். ஆகவே நாத வடிவமாக இருக்கிற இறைவனே நாதத் தாலேயே போற்றுவது பெரிதும் சிறப்புடையதாகும். இசையின் வடிவமாக இருக்கின்ற எம்பிரான இசையின் மூலமாகவே பாடி பக்தி செலுத்துவது அவருடைய தரிசனத்தைப் பெறுவதற்கு மிக எளிதானதும் சிறந்ததுமான வழியாகும். சங்கீத மும்மூர்த்திகள் என்று நாம் போற்றுகின்ற பூரீ தியா கையர், பூ முத்துசாமி தீட்சிதர், பூ சியாமா சாஸ்திரிகள் ஆகியோரும், பூரீபுரந்தர தாசர், சுவாதித் திருநாள் மகாராஜா முதலான பெரியோர்களும், தமிழிலே தேவாரம், திருவாசகம், திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றை அருளிய நால்வரும், ஆழ்வார் களும் இந்த எளிய முறையை நமக்கு வழங்கியுள்ளனர். இந்த முறையைப் பின்பற்றி திரு. ம. ப. பெரியசாமித் துரன் அவர்கள் பெரியோர்களின் வழியை முன்மாதிரியாகக் கொண்டு பல ஆண்டுகளாகத் தமிழிலே நல்ல இசைப் பாடல்களை உண்டாக்கி வருகிரு.ர்கள். எங்கும் நிறைந்த இறைவனுக்குப் பல பெயர்கள் உண்டு. அவனை சிவன் எனலாம்; மகாவிஷ்ணு எனலாம்; பராசக்தி, முருகன், கணநாதன் இப்படிப் பலவகையாக அந்தப் பரம்பொருளை வணங்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/5&oldid=776872" இலிருந்து மீள்விக்கப்பட்டது