பக்கம்:நவமணி இசை மாலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சங்கீத கலாநிதி திரு. பி. சாம்பமூர்த்தி அவர்கள் மதிப்புரையின் ஒரு பகுதி இசையமைப்புப்பற்றி இரண்டொரு சொற்கள் கூற விரும்புகிறேன். தெரிந்த இராகங்களில் கீர்த்தனை இயற்றுவது மிகச் சுலபம். ஏனெனில் அவைகளுடைய வடிவம் என்னென்ன சுரங்களினுல் இனிமையை எய்துகிறது என்பது நமக்குத் தெரியும். சங்கராபரணம், பைரவி, காம்போதி முதலிய இராகங்களைப்பற்றிக் குழந்தைகளைக் கேட்டாலும் சொல்லி விடும். ஆயினும் சில அருமையான இராகங்களை திரு. பெ. துரன் கையாண்டிருக்கிரு.ர்கள். மனுேஹரி இராகத்தில் செய்திருக்கிற உருப்படி, மிகவும் அழகாக அமைந்திருக்கிறது. இதேபோல் ஹம்சாநந்தி இராகமும் அருமையாக அமைந்துள்ளது. உள்ளத் தைத் தொடும் ஒரு பாட்டுப் பிரசித்தம் அடைய வேண்டு மாளுல், பாட்டுக் கருத்தோடு கூடியிருக்கவேண்டும்; இசையும் சிறந்த முறையில் அமையவேண்டும். இரண்டும் கலந்த முறை யில் இப் பாடல்கள் அமைந்துள்ளன. இராகமாலிகை பற்றியும் பாராட்டவேண்டும். இராகமாலிகையில் இராகங்களினுடைய பெயரெல்லாம் அந்தச் சரணங்களில் வருமாறு சேர்த்திருக் கிருர்கள். இது பாராட்டத் தக்கது. இராகமாலிகை மிக நன்ருக அமைந்துள்ளது என்று நான் மீண்டும் குறிப்பிடுகின்றேன். பாடல்களை இயற்றிய திரு. பெ. தூரன் அவர்களைப் பல்லாண்டு களாக எனக்குத் தெரியும். சென்னைப் பல்கலைக்கழகத்தில் நான் பணியாற்றியபோது, இருவரும் இத்துறை குறித்துக் கலந்து பேசுவோம். பக்தி ஊற்று இவர்களின் பாடல்களில் பெருக் கெடுத்தோடும். எனவே இவர்களின் பாடல்கள், பிற்காலத் திலும் நிலைத்து நிற்கும். பலரும் பாடி வருவர். கடவுள் அருள் வாய்க்கப்பெற்ற திரு. பெ. தூரன் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்து, இதுபோன்ற பல பாடல்களைத் தமிழிற்குத் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பி. சாம்பமூர்த்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/7&oldid=776914" இலிருந்து மீள்விக்கப்பட்டது