பக்கம்:நவமணி இசை மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை உலகத்திலுள்ள சங்கீதங்களிலெல்லாம் தலைசிறந்தது நமது கர்னுடக சங்கீதம்: இதில் ஐயமே இல்லை. ஆணுல் இன்று கர்னுடக சங்கீதம் மங்கி வருகின்றது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இதற்குக் காரணங்கள் பல சொல்லலாம். அவற்றில் முக்கியமானது நமது இளந் தலைமுறையினர் இதில் உற்சாகங்கொள்ளாமல் வேறு இசைகளில் மயங்கியிருக் கிரு.ர்கள் என்பதே ஆகும். நமது இசை ஒப்புயர்வற்றது என்று சொல்லிக்கொண்டி ருப்பதில் பயன் இல்லை. அடுத்த தலைமுறையினரை இதில் ஈடுபாடுசெய்ய நாம் தவறிவிட்டால் பிறகு நமது சங்கீதத்திற்கே இடையூறு நேர்ந்துவிடும். மக்கள் போற்ருதிருந்தால் எந்தக் கலையும் வளராது நலிந்து போய்விடும். ஆகவே எப்படி இதில் ஈடுபாடுகொள்ளச் செய்வது என்பது தான் நமக்கு முன்னுல் உள்ள பிரச்சினை. சுமார் முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக சங்கீத மும்மூர்த்திகளின் இசையை மாந்தி இன்பங்கண்ட எனக்கே அதன் சிறப்பு முழுமையாகத் தெரியவில்லை. ஆண்டுகள் செல்லச் செல்ல அதிலே புதிய புதிய இன்பங்களும் நுட்பங்களும் ரசனை களும் சுவைகளும் தோன்றுகின்றன. தோன்றிக்கொண்டே இருக்கின்றன. இவ்வளவு காலம் இதில் ஈடுபாடுகொள்ள இன்றைய புதிய தலைமுறைக்குப் பொறுமை இருக்கிறதா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நவமணி_இசை_மாலை.pdf/9&oldid=776953" இலிருந்து மீள்விக்கப்பட்டது