பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/102

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


தலையெழுத்து காட்சி 1 இடம்: மாங்குடி கிராமம். காலம்: காலை உள்ளே: கருப்பண்ணன்... காமாட்சி (கருப்பண்ணன் தன் மனைவி காமாட்சியை உரக்கக் கூவி அழைக்கிருt) கருப்: காமாட்சி. காமாட்சி... ஏய் காமாட்சி! காமா: (சிறிது நேரம்கழித்து வந்தபடி) என்னங்க, கூப்புட்டீங்களா.. கருப்: இருபது வருவுமா நானும் இப்படித்தான் கூப்புடுறேன். நீயும் இப்படித்தான் கேட்டுகிட்டே வர்றே! காமாட்சி! முதல் வேலையா, உனக்கு ஒரு செவிட்டு மிஷின் வாங்கித் தரணும். இல்லே... நான் ஒரு லவுடு ஸ்பீக்கர் ஆவது வாங்கிக்கணும். காமா: (அலட்சியமாக) உங்க பையன் பட்டணத்துலதான் காலேஜில படிக்கிருன், அவன் படிச்சி முடிச்சு, ஆபீசர் வேலைக்குப் போன பிறகு, முதல் சம்பளம் வாங்கின. பிறகு, இரண்டையுமே வாங்கிக்கலாம்! இப்ப ஏன் கூப்புட்டீங்க... அடுப்பில சாதம் இருக்கு... சீக்கிரமா சொல்லுங்க... கருப் (எரிச்சலுடன்) ஒண்னுமில்லே...