பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கருப் கத்திக் கதறி என்னையும் பயமுறுத்தாதே! இப்படிக் கொண்டாப்பா தந்தியை... தந்திக்காரன்: இங்கே கையெழுத்தைப் போடுங்க! இந்தாங்க... வர்ரேன் சார்...(தந்தியை கொடுத்து விட்டுப் போகிருன்) கடமா அந்த ஆளு போயாச்சு...பிரிங்க...படிங்க! கைகால் ஆடுனது போதும்... இவ்வளவு நேரமா பிரிக்க... கருப்: இந்தா ஆச்சுடி... அய்யய்யோ... நாக்கெல்லாம். வறண்டு போச்சே. கொஞ்சம் தண்ணி கொண்டு. வாயேன். காமா: தந்தியை படிங்க... தண்ணியை அப்புறம் குடிக்கலாம். கருப்: (முணுமுணுக்கிருர், பிறகு) காமாட்சி...உன் பையன்... காமா என் பையனுக்கு என்ன ஆச்சுங்க... (அழ ஆரம்பிக் கிருள்) ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுன்னு வாழைக் கண்ணு மாதிரி வச்சிருந்தேன். அட கடவுளே! உனக்குமா கண்ணுல்லாம போச்சு... கருப்: அடசி உன் பையன் மகேஸ்வரன் தந்தி அடிச்சிருக்கான். அவனுக்கு ஒண்னும் ஆகலே! நல்லா கல்லுப் பிள்ளையார் மாதிரிதான் இருக்கான். காமா: அப்பா... என் வயிற்றில பால் வார்த்தீங்க, கருப் பாலை ஊத்துனேன? இப்பொ நெருப்பையும் கொட்டப் போறேன், பால் நல்லா பொங்கப் போகுது. காமா: என்ன சொல் lங்க? கருப்; உன் பையன், பணம் வேணும்னு தந்தி: அடிச்சிருக்கா ன்,