பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/125

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


124 காமா : அவன் கேட்டிருந்தா நானே கொடுத்திருப்பேன், என்ன பண்றது? சேரக்கூடாத இடத்துல சிநேகிதம், சிகரெட்டுல இருந்து சினிமா வரைக்கும் ஒன்னையும் அவன் விட்டு வைக்கல, கைக்கு உதவியா இருப்பான்னு நினைச்சு செல்லம் கொடுத்தேன். அவன் கைம்பெண் வளர்த்த கழிசடையா போயிட்டான். வயசுக்கு வந்த பையன்.அடிக்க மனசு இல்லே...அழுதே சாகுறேன்...ம் பொன் : தகவல் ஒன்னும் இல்லியா...எனக்கு ஒரு லெட்டர் போட்டிருந்தா நானும் என் வீட்டுக்காரரும் வந்து ஏதாவது முயற்சி பண்ணி பார்க்க மாட்டோமா? காமா : என் மருமகன் தான் தெய்வமா இருந்து காப்பாத்துது...அடிக்கடி வந்து அஞ்சு பத்துன்னு வாங்கிகிட்டு போய், பையனை ே தடுது...அவரும் இப்படி ஆதரவா இல்லேன்ன, என் கதி அதோ கதிதான். அதோ கதிதான்; பொன் நீ கொடுத்து வச்சவ காமு, இரண்டு மகனுங்க போதாதுன்னு மூனவது மகளு மருமகன் வந்திருக்காரு. எனக்கென்னவோ, உன் பையன் சீக்கிரமா வந்துடுவான்னு என் மனசுல படுது... காமா: உன் வாய்க்கு சர்க்கரைதான் போடணும். ஆ. (நினைவுக்கு வந்தவளாய்) பொன்னு. இரு, உனக்கு நல்ல மோரா கலக்கிட்டு வரிரேன். (பணத்தையும், பில்லேயும் எடுத்து இடுப்பில் செருகிய வாறு உள்ளே போகிருள். பொன்னம்மா டானிக் பாட்டிலை எடுத்துப் பார்க்கிருள்) பொன்: நான் சாப்பிட்ட டானிக்பாட்டில்போல இருக்குது வி ை10 ரூபாதானே. சிங்காரம் ஏன் 15 ரூபாய்னு சொன்னன்? ஒருவேளை இவனும் காமாட்சியை ஏமாத்துருனே? ஒகோ, படிக்காத வ தாயா