பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/129

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


128 கந்! உன்னை விடமாட்டேன். உன்! அம்மா கையுல ஒப்படைச்ச பிறகுதான் விடுவேன் உன்னைத் தேடித் தேடி நாயா அலைஞ்சி என் உள்ளங்காலெல்லாம். தேஞ்சு போச்சுடா பாவி! பெரி: (கிண்டலாக) செருப்பு போட்டுகிட்டிருந்தா கால் தேயுமா? அந்தப் பழக்கம்தான் இல்லியே! கத்: கிண்டலா பண்றே? அழுத்தை உறிஞ்சுபுடுவேன்? கழுசே! அத்தே! அத்தே! வாங்க! வந்து பாருங்க! உங்க புத்திர சிகாமணி வந்துட்டான். (காமாட்சியும் பொன்னம்மாளும் உள்ளேயிருந்து வருகின்றனர். பொன்னம் மாளின் ஆச்சரியம் காமாட்சி யின் மிக சாந்தமான பார்வை, இதைப் பார்த்த பெரியசாமி பதறிப்போய்) பெரி: அம்மா நான் திரும்பி வந்துட்டேம்மா! இனிமே ஒழுங்கா உனக்கு உதவியா இருக்குறேம்மா! என்னைப் பார்த்ததும் திட்டுவீங்க, அடிப்பீங்க. வீட்டை விட்டு வெளியே போடான்னு விரட்டுவீங்கன்னு நினைச்சேன் ஆன. நீங்க பேசாம இருக்குறதை பார்த்தா எனக்கு. பயமா இருக்கும் மா, எனக்கு பயமாயிருக்குது. காமா: எனக்கும்தான் மகனே ի Ա 1ԼՈ Դ՞ இருக்ருது. பள்ளிக்கூடத்துக்கு அனுப்பாம, பால் வியாபாரத்துக்கு உதவியா இருக்க உன்னை வச்சுகிட்டேன். ஆளு, நீயோ பொய் சொன்னே. ஏமாத்துனே, திருடினே! பாக்கிப். பணத்தோட ஒடினே ... இனிமே, நீ கொலை கூட செஞ்சிடுவியோன்னு எனக்கு பயமா இருக்குதுப்பா..., பெரிய: இல்லேம்மா! திருந்திட்டேன்... சத்தியமா, உன் மேலே ஆணையா திருட மாட்டேன், ஏமாத்த மாட்டேன்.