131
காமா: ஆமா பொன்னு. சீக்கிரம் சொல்லு, அதுக்குள்ளே வேற விவகாரம் ஏதாவது வந்துடப் போவுது!
பொன்: போன மாசம் எனக்கு அவசரம்னு என் தங்க சங்கிலியை கொடுத்து, அடகுக் கடையில பணம் வாங்கச் சொல்லுலே...இந்தா 200 ரூபாய்... வட்டி 6 ரூபாய், , இப்பவே எனக்கு அவசரமா வேனும், ஒரு முக்கியமான கல்யாணம்,
காமா அதுக்கென்ன. நம்ம மருமகப்பிள்ளை தான் வச்சி வாங்கிட்டு வந்தாரு, அவரும் இங்கதான் இருக்காரு! நல்ல வேளை...ரசீதும் இங்கே தான் இருக்கு. (பெட்டியில் இருந்து எடுக்கிருள்)
கந்தன் வாயை துண்டால் துடைத்தபடி வெளியே வருகிருன்),
கந்! அத்தே! நல்லா பசங்களுக்கு புத்திமதி சொல்லியிருக் கேன், இனிமே ஒழுங்கா, யோக்கியமா இருப்பானுங்க, நான் போய் பெரியசாமி வந்த விஷயத்தை பாப்பாத்தி. கிட்ட சொல்லி அழைச்சுகிட்டு வந்துடுறேன்,
காமா : சரிங்க...அதுக்கு முன்னே ஒரு அவசரம், போன மாசம் நகை ஒன்னு அடகு வைக்குலே. நம்ப பொன்ன மாளுதுதான். இந்தாங்க வட்டியும், பணமும், இப்பவே திருப்பித் தந்துடுங்க......
கந் : (தடுமாறுகிருன்) இப்பவே வா...எனக்கு கொஞ்சம்
அவசர வேலை...நாளைக்கு...சாயங்காலம் கான்... தோதுபடும்...நான் போய்ட்டு...வந்துடுறேனே...
பொன் : அப்படின்ன, நானும் உங்க கூட வர்ரேன், அந்தக் கடையில கையெழுத்து போட்டுட்டு போங்க... நான் இருந்து வாங்கிகிட்டு போயிடுறேன், ஏன்னு,
பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/132
Jump to navigation
Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
