பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/133

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


132 சங்கிலி இல்லாம எந்தக் கல்யாணத்துக்கும் நான் போற பழக்கம் இல்லே... வாங்க போக்லாம். (பணத்தை அவன் எண்ணும் பொழுது, கை நடுங்கி, ரசீது கீழே விழ, அதை எடுத்துப் பார்க்கிருள் பொன்னம்மாள்) பொன் : காமாட்சி, 400 ரூபாய்க்கு ரசீது இருக்கு... காமா : 400 ரூபாய்க்கா! வேறு ரசீது ஒண்ணும் இல்லியே! கந் : இது மட்டுந்தானே இருக்குது. ஏங்க... நீங்க 200. ரூபாய்தானே தந்தீங்க. இதுல 400 ரூபாய். எப்படி வரும். கடைக்காரன் தப்பா பில் போட்டுட் டாரு! வாங்க கடைக்கு போவோம்... l அத்தை மன்னிச்சுடுங்க! நான் 400 ரூபாதான் வாங்கினேன். உங்ககிட்ட கொடுத்தது. 200 ரூபாதான். திருப்பித் தரும்போது அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்னு உங்ககிட்ட சொல்லுலே. இப்ப அவங்களே நேரில. வந்தது.லைதான் நிலமை மாறிப்போச்சி. காமா : ஏங்க! நீங்களுமா என்னை ஏமாத்தினிங்க! ஐயோ கடவுளே! இந்த உலகத்துல நான் யாரைத்தான் நம்புற துன்னு தெரியலியே! (பெரியசாமியும் சிங்காரமும் ஓடிவந்து, கந்தனின் ஆளுக்கொரு கையைப் பிடித்துக்கொண்டு) இரு : மாமாவும் நம்ம சேஸ்தா ை(சிரிக்கின்றனர்) கத : கைய விடுங்கடா! நான் போறேன், வீட்டுக்கும் போய் பணத்தோட வர்றேன், இரு ; அம்மா! மாமா கூட நாங்களும் போருேம்! காமா : யாரும் யாரோடயும் போக வேணும், நானே போறேன். நான் போறதுக்கு நேரம் வந்தாச்சு.