பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

147 என்ன ஆச்சரியமா இருக்கு! சுப்ரமணியத்தோட பாண்டைக் காணுேம் சரஸ்: எனக்கு ஒண்ணும் தெரியாதுங்க, ஏகா: கையை பிசைஞ்சுகிட்டே நின்னுகிட்டு இந்த விவ காரத்தை கைகழுவிட்டே! இப்ப அவஸ்தை படுறது நான் தானே! ஒரு குடும்பத்துல தவிே படிச்சவளா இருந்தா, அது ஒராயிரம் டீச்சருக்கு சமம்னு பெரியவங்க சொல்வாங்க! படிக்காத பெண் இருக்கிற குடும்பத்துல, பட்டு பட்டுன்னு கஷ்டமும் கலக்கமும் வரும்னு சொல்லுவாங்க. எவ்வளவு சரியா இருக்கு பார்த்தியா! வேல்: சுந்தரி சுந்தரி! அடேடே! உங்களை தேடித்தான் மாமr போனேன். நீங்களே வந்துட்டீங்க, ஏன் மாமா லேட்டு!டீ பார்ட்டியா! டின்னரா...குரூப்போட்டாவா? (ஏகாபரம் ஒரு புத்தகத்தை விரித்துப்போர்த்து பிறகு மூடி வைக்கிருர். அவர் முகம் மாறுகிறது.) ஏகா: குசலம் விசாரிச்சது போதும். மரியாதையா கேட்கறதுக்குப் பதில் சொல்லு, தங்கச்சி பையன்னு நான் உன்னை வீட்டுக்கு வர போக அனுமதிச்சேன். எத்தனை நாளா இந்த திருட்டு வேலை... (வேல்முருகனுக்கு விஷபம் புரியாது விழிக்கிருன்) புஸ்தகம்னு ஆரம்பிச்சே...இப்ப கள்ளத்தனமான வேலையெல்லாம் பண்ண ஆரம்பிச்சிட்டே! இனிமே இந்த வீட்டுலே நுழையாதே! வேல்: (பதறியபடி) நான் ஒன்னும் தப்பு தவரு நடந்துக் கலியே! மாமா! யாரோ உங்களுக்கு தப்பா தகவல் கொடுத்திருக்காங்க! நான் ரொம்ப நேர்மையானவள், என்னை உங்க வீட்டுக்குள்ளே நுழையாதேன்னு சொல்ல உங்களுக்கு உரிமை உண்டு! ஆன அயோக்கியன்னு சொல்ல உரிமையில்லே.