பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/15

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


15 வீட்டுல இருக்க அவனுக்குப் பிடிக்கல...வேற வீட்டுக்கு தனிக்குடித்தனம் போயிட்டாங்க...அவ்வளவுதான். லதா : நான் ஊருல இல்லாத நேரம் பார்த்து கல்யாணமா அம்மா! இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும். அது தெரிஞ்சுட்டா நான் நிம்மிதியா இருக்க முயற்சி. பண்ணுறேன். இல்லே! அம்மா...அப்புறம் நீங்க இந்த, உலகத்துல, அநாதை மாதிரி தனியாதான் வாழனும். அலமேலு : எனக்கு சாபம் தர்றியா மகளே! சரி...உனக்கு என்ன உண்மை வேணும் கேளு! முடிஞ்சா சொல்றேன்: லதா சொன்ன உனக்குப் புரியாதும்மா! கேட்டாலும் உனக்கு பதில் சொல்ல முடியாதும்மா! அலமேலு : முயற்சி பண்றேன்!...உனக்கு உதவ முடியும் மான்னு இத்தனை நாளா முயற்சிக்கறேன்! முடியலே! இப்பவாவது எனக்கு ஒரு சந்தர்ப்பத்தை குடும்மா... சந்தர்ப்பத்தைக் குடு, லதா ஏம்மா! ஒரே வீட்டுல, இருபது வருஷமா உயிருக்கு உயிரா பழகிட்டு, இப்ப, என்னை விட்டுட்டு, வேருெருத் தியை போயி கல்யாணம் பண்ணிக்கிட்டு இருக்காரே: உங்க தம்பி! ஏன்! ஏன்? எனக்கு என்னம்மா குறைச்சல்? என் உடம்பில குறையா? இல்லே தீராத வியாதியா? அலமேலு : என்னை மன்னிச்சுடும்மா! என்லை இதுக்கு நிச்சயம் பதில் சொல்ல முடியாது! இந்த கேள்வியை அவனையே போயி கேளு. லதா கேட்குறேம்மா கேட்குறேன்! கோயிலுக்குப் போறதை விட, அந்தக் கொடுமைக்காரரையே போயி கேட்டா என் துன்பம் கொஞ்சமாவது குறையும். வாங்க...வாங்க போகலாம்! என்னம்மா தயக்கம்?