பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

155 சின்ன : பேரன்களுக்கு இல்லேப்பா! சாட்சாத் எனக்குத் தான்! என் வாத்தியார் எனக்குப் படிக்கக் குடுத்த புஸ்தகம்! என்ன முழிக்குறே? அசல் ஆடு திருடுன கள்ளன் மாதிரியே முழிக்கிறியேப்பா! ராமையா : காலங்கெட்டுப் போச்சு. கலி பூந்து விளையாடு கிருன். கட்டையில போற வயசுல புத்தக முட்டைய தூக்குறே! ஏன்பா! உனக்கு மூளைகீகள கலங்கிடுச்சா! இல்லே... தெரியாமத்தான் கேக்குறேன்... மேலே நட்டுலூசா போயிடுச்சா... சின்ன . எல்லாம் நல்லாவே இருக்கு. கவலைப்படாதே! ம்...என் கவலை உனக்கெங்கே தெரியப் போகுது. இந்தக் கிராமத்துல ஒண்டிக்கட்டை. உன் கிட்ட சொன்ன தான், எனக்கும் கொஞ்சம் பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும். சா : சும்மா சொல்லுப்பா, இப்ப நேத்து பழக்கமா நாற்பது வருஷமா கூட்டாளிங்க! நமக்குள்ளே என்ன ரகசியம் இருக்கு. கூச்சப் படாம சொல்லு. சின்ன : வேற ஒண்ணும் இல்லே! நாம ரெண்டு பேரும் ஒன்னங்கிளாசுல போய் முதன் முதலா உட்கார்ந்தது உனக்கு ஞாபகம் இருக்கா! பச்சை மரத்துல ஆணி பாஞ்சமாதிரி,இன்னக்கும் எனக்கு ஞாபகம் இருக்குது! ரா : ஏன் இல்லே! வாத்தியார் அடிச்சாருன்னு திட்டி புட்டு ஓடி வந்துட்டோமே! அப்புறம் பள்ளிக்கூடத்து பக்கமே போகலியே! அப்படி ஒதுங்கி வந்துட்ட்து எவ்வளவு நல்லதா போச்சுன்னு இப்பதான் தெரியுது! சின்ன என்ன அப்படி சொல்றே படிக்காம போனது நல்லதாவா படுது, நான் எவ்வளவு வேதனைப்பட்டு கண்கலங்கிகிட்டு இருக்குறேன் தெரியுமா? கேவலம்