பக்கம்:நவரச நாடகங்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 சின்னப்பனுக்கு புத்தி புகட்டணும் ஒரே கல்லுல ரென்டு மாங்காய், எப்படி? சின்ன: போய் வா. வந்த பிறகு பேசிக்குறேன்... சாமை: ஏ ஒன்னங்கிளாஸ்...நீ பள்ளிக்கூடம் போ. நான் பட்டணம் போறேன்...மங்கா துண்டை எடு!...பையை குடு...நேரம் ஆகுது. (உள்ளே போகிருன்...மங்கா பின்னல் போகிருள்). சின்ன (மெதுவாக) பட்ட ணமா போறே! என்கிட்ட சவாலா விடுறே... போய்ட்டு வா...அப்பதான் உனக்கு புத்தி வரும். எனக்கும் சக்தி வரும், (மச்மாக சிரித்துக் கொண்டே செல்கிருன். காட்சி-2 இடம் : அதே விடு. காலம் : காலை உள்ளே: மங்காத்தா. சரோஜா, ராமையா, சின்னப்பன். மங்காத்தா முறத்தில் உள்ள அரிசியில் கல் பொறுக்கிக் கொண்டிருக்கிருள். வெளியிலிருந்து வெறும் குடத்துடன் சரோஜா. கவலையுடன் வரு கிருள். அவளை நிமிர்ந்து பார்த்து எரிச்சலுடன்) மங்கா: சரோஜா! ஏய் சரோஜா! ஏண்டி, நான் கூப்பிடுறது காதில விழுதா. எதையோ பறிகொடுத்தவ மாதிரி, வர்ரே! என்ன நடந்துச்சு, தண்ணி கொண்டு வர்ரேன்னு' வேகமா குளத்துக்குப் போனே, இப்பொ வெறும் குடத்தோட வர்ரே? ஏன்? குளத்துல தண்ணி இல்லாமலா போச்சா.